Wednesday, October 8, 2008

கொட்டிக்கிடக்கும் அழகு







புகைப்படம் எடுத்தல் எனக்குப்பிடித்தவற்றில் ஒன்று. பத்திரிகையாளன் என்ற படியால் என்னிடம் ஒரு டிஜிட்டல் புகைப்படக்கருவி உள்ளது. எங்கள் பகுதியில் இயற்கை அழகுக்கு பஞ்சமே இல்லை. இயற்கை அன்னை நிரந்தரமாய் உறைந்து விட்ட இடமோ என எண்ணத்தோன்றும் அளவுக்கு இங்கு அழகு கொட்டிக்கிடக்கின்றது. செய்தி சேகரிக்கச்செல்லும் போது மனதை பறிகொடுத்து நான் எடுத்த சில படங்களை நண்பர்களுக்காக இங்கு தருகிறேன்.
வேதனை குறிப்பு: இங்கு காணப்படும் சென்கிளயர் (St.Clair) நீர் வீழச்சி இன்னமும் சிறிது காலத்தில் முற்றாக மறைந்து விடும் காரணம் இங்கு அமைக்கப்பட்டு வரும் கொத்மலை நீர் மின் திட்டம்.

2 comments:

ARV Loshan said...

அழகான புகைப்படம்.அண்மையில் நானும் குறிப்பிட்ட பகுதியால் பயணம் செய்தேன்.. அழகான இயற்கைக் காட்சிகள்..
துரித அபிவிருத்திகளால் (கொத்மலைத் திட்டம்)இடமே மாறி வருகிறது..
உங்கள் இறுதி வரிகள் மனதை ஏதோ செய்கிறது..

இறக்குவானை நிர்ஷன் said...

வேதனையாகத்தான் இருக்கிறது. எத்தனையோ போராட்டங்கள் வெற்றியைத் தரவில்லைதானே?