Tuesday, October 7, 2008

ஊடகத்தாண்டவம்


தாண்டவம் என்ற பெயரில் இப்பக்கத்தை ஆரம்பித்ததற்குக்காரணத்தை பலர் கேட்கலாம்.அதற்குப்பதில் தொடர்ச்சியான எனது பதிவுகளில் கிடைக்கும்.எனது முதல் பதிவு பேனா போராளிகளாக விளங்கி ஊடக சுதந்திரத்திற்காக தமது உயிரை தியாகம் செய்த பத்திரிகையுலக நண்பர்களுக்காகவும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்கும் அஞ்சலியாக விளங்கட்டும். மேலும் கடந்த திங்கட்கிழமை அனுராதபுரத்தில் செய்தி சேகரிக்கச்சென்ற போது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சிரச வலைப்பின்னல் பிராந்திய நிருபர் அன்புச்சகோதரன் ரஷ்மி மஹ்ரூப்புக்கும் எனது வீர வணக்கங்கள். அருகில் காணப்படும் படத்தை உற்றுநோக்குங்கள்.இது அனுராதபுரம் குண்டு வெடிப்பில் உயிர் துறந்த பிரதேச செய்தியாளருடையது தான். சேதமுற்றாலும் செய்தி சேகரித்து விட்ட இறுமாப்பில் இருக்கும் இந்த கமராவுக்கு ஒரு சல்யூட். என்ன தான் எம்மை நசுக்கி பிழிந்தாலும் தொடர்ந்தும் ஆடுவோம் …… ஊடகத்தாண்டவம்!

5 comments:

கபிலர் said...

நல்லது சிவா. நீங்களும் வலைப்பூக்களின் கூட்டத்தில் இணைந்து கொள்கிறீர்கள் வாழ்த்துக்கள். ஊடகக்காரர்களின் அட்டகாசங்கள் அவர்களிக் கொடுமைகளை நன்றாக எழுதுங்கள் உங்கள் பாணியில் தொடருங்கள். எங்கள் அனைவரது ஆதரவுகளும் உங்களுக்கிருக்கும்.- அதிரன்

சிவலிங்கம் சிவகுமாரன் said...

அதிரனுக்கு நன்றிகள் உங்களை ஹீரோவாக போட்டு ஒரு சிறுகதை எழுதியதற்கு ஒன்றும் கிடையாதா?

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள். உங்கள் தரமான எழுத்துக்களை எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன். உண்மையை வெளிப்படுத்த பயமின்றி குரல்கொடுக்கும் மற்றுமொரு சகோதரர் வலையில் இணைகிறார் என்பதில் பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன்.
எல்லாம் அந்தத் தாண்டவக்காரன் ஏக ஈசனின் மகிமைதான்.

ம்ம்ம்.. கலக்குங்க.

ARV Loshan said...

வாழ்த்துக்கள் .. உங்களிடமிருந்து காத்திரமான பதிவுகள் வரட்டும்,ஆனால் எல்லாம் பத்திரம்(பணி,பணம்,உடல்& உயிர்)

எனக்கு ஆரம்ப காலத்தில் (வலைப்பதிவராக) சிரேஷ்ட வலைப்பதிவர் சொன்ன அறிவுரை..word verificationஐ தூக்கிடுங்க.அது பின்னூட்டம் இடுவோருக்கு பெரிய தொல்லை

சிவலிங்கம் சிவகுமாரன் said...

மிகவும் நன்றி லோஷன் உங்களைப்பற்றியும் பதிவிட நிறையஉள்ளது
காத்திருங்கள்.நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் (பணி,பணம், உயிர்,உடல்)
நிரந்தரமில்லாத அம்சங்கள் என்று சிறு வயதிலேயே உணர்ந்துகொண்டதால் அதன் மீது பற்றில்லாமல் தான் இருக்கிறேன்.எனினும் என் மேல் உள்ள அன்பிற்கு மிகவும் நன்றிகள்.