Tuesday, October 7, 2008

சொல்லுங்கள் நிர்ஷன்….!

வலைப்பக்கம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவா நெடுநாட்களாக இருந்த போதிலும் வேலைப்பளு காரணமாக அது கைகூடவில்லை. இப்போது மட்டும் சும்மா இருக்கிறேனா என்று கேட்காதீர்கள்.எனினும் என்னை இவ்விடயத்தில் ஈடுபாடு காட்ட உதவிய எனது அன்புச்சகோதரனும் என்னுடன் வீரகேசரி தலைமைகாரியாலயத்தில் பல விடயங்களை பகிர்ந்து கொண்ட இளரத்தம் நிர்ஷனுக்கு எனது நன்றிகள் பல.மேலும் வந்தியதேவனுக்கும் தான்.சரி ஆரம்பித்து விட்டேன் இனி ஆடப்போகிறேன் தாண்டவம்.நிர்ஷன் எதிலிருந்து ஆரம்பிக்கலாம்? இல்லாத ஒரு பாத்திரத்தை சிருஷ்டித்து அதற்கு ‘அண்ணன் “ எனபபெயரிட்டு நாம் செய்த அட்டகாசங்களையா?அல்லது எமது பாடல் கேட்டு செவியை மூடிய புத்தர் சிலை கதையையா சொல்லுங்கள் நிர்ஷன் சொல்லுங்கள்….!

3 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துகள் சகோதரரே. சாதியுங்கள். காலச்சுவடுகளை தாண்டி சாதனை படைப்போம்.சாதனைகளைச் சேர்த்து சரித்திரமாக்குவோம். சமுதாயத்துக்காக!

வந்தியத்தேவன் said...

வணக்கம் சிவா அண்ணா நீங்களும் ஜோதியில் கலந்துகொண்டதற்க்கு நன்றிகள். இனி உங்கள் தாண்டவன் தொடருட்டும்.

சிவலிங்கம் சிவகுமாரன் said...

பொன்னியின் செல்வனே, வந்தியதேவா வந்தேன் வந்தேன் என்னை வரவைத்தவர்களுள் தாங்களும் ஒருவர் நன்றி