அலைகள் வந்து கால்கள் நனைத்த போது
கொன்று விடும் கோபம் வந்தது,
உன் பெயரை மணலில் எழுதி அமர்ந்திருக்கும் அந்த தருணத்தில்!
உனக்கு கடற்கரை ஞாபகம் வருமா?
உனக்கு கடற்கரை ஞாபகம் வருமா?
வரும் என்று நினைக்கிறேன்,இதை வாசித்தப்பிறகு சரி!
காதல் கரை சேர காதலர்கள் சேரும் இடம் கடற்கரையாம்
காதல் கரை சேர காதலர்கள் சேரும் இடம் கடற்கரையாம்
என்ன வேடிக்கை பார்த்தாயா?
நாமும் அப்படித்தான் நினைத்தோம்
நாமும் அப்படித்தான் நினைத்தோம்
இன்று கரையில்லா கடலாய் நம் வாழ்க்கை!
காலைச்சூரியன்,பளிச்சிடும் பனித்துளிகள்
காலைச்சூரியன்,பளிச்சிடும் பனித்துளிகள்
அனைத்திலும் நீ…மனதிற்குள் மகிழ்ச்சி
ஆனால் இரவுகள் நரகம்
ஆனால் இரவுகள் நரகம்
நிலவாய் நீ கடலாய் நான்
பார்த்துக்கொண்டு மட்டுமேஇருக்கின்றேன்
நினைப்பாயா என்று கேட்டால் உன் மனசு திறக்கிறாய்
நினைப்பாயா என்று கேட்டால் உன் மனசு திறக்கிறாய்
நான் நிறைந்து விடுகிறேன்
ஆனால் உன்னை நான்…
ஆனால் உன்னை நான்…
இப்படிச்சொன்னால் கோபிப்பாயா?
மரணித்தால் தானே மறக்க
சுவாசமே நீ தானே பெண்ணே
6 comments:
//அலைகள் வந்து கால்கள் நனைத்த போது
கொன்று விடும் கோபம் வந்தது,
உன் பெயரை மணலில் எழுதி அமர்ந்திருக்கும் அந்த தருணத்தில்!
//
அழகானதொரு ஆரம்பம்,
"நினைவலைகளுக்குள் கூடாரமிட்டுக்காத்திருக்கும் அத்திவிரமிடப்படாத அழுகைகளை
எழுத்துக்களாக மாற்றுகிறேன்..
எப்போதாவது நீ
படிப்பாய் தானே?"
எனது இந்த வரிகள் உங்கள் கவிதைக்குப் பொருந்துமா?
வலைப்பதிவு ஆரம்பித்தமைக்குப் பாராட்டுக்கள்... நல்ல ஆக்கங்கள்.
(ம்... என்ன கஷ்டம் வந்தாலும் அதையே படிக்கல்லாக்கும் கலை உங்களிடமுண்டு)
நன்றி மிருணாளன்
அன்பின் சிவகுமார் அண்ணா
இந்த சங்கிலித் தொடர் விளையாட்டில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன.
http://enularalkal.blogspot.com/
என்னை யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?
///அலைகள் வந்து கால்கள் நனைத்த போது
கொன்று விடும் கோபம் வந்தது,
உன் பெயரை மணலில் எழுதி அமர்ந்திருக்கும் அந்த தருணத்தில்!
////
மரணித்தால் தானே மறக்க
சுவாசமே நீ தானே பெண்ணே///
அருமையான கவிதை வாழ்த்துக்கள்...
அன்புடன் ஜீவன்...
Post a Comment