இலண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேன இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இங்கிலாந்து பந்து வீச்சாளர் வீரர் ஜோஸ் டாங் வீசிய 13வது ஓவரின் ஒரு இன்ஸ்விங் யாக்ர்கர் பந்தை சாய் சுதர்சன் எதிர்கொண்டு கீழே விழுந்தார். அதற்கு இங்கிலாந்து வீரர்கள் எல்.டபிள்யூ முறையிலான ஆட்டமிழப்பை கோரினர். நடுவர் குமார் தர்மசேன ஆட்டமிழப்பு கோரிய ஜோஸ் டாங்கிடம் அப்பந்து துடுப்பில் பட்டு சென்றதாக அதாவது Inside edge என்ற அர்த்தப்படும் வகையில் தனது விரல்களால் சைகை செய்து காட்டினார். இதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் எவரும் மூன்றாம் நடுவரை நாடும் எண்ணத்தை கைவிட்டனர்.பின்பு அப்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தை பார்த்த போது குமார் தர்மசேன கூறியது சரியானதாகவே இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு டி.ஆர்.எஸ் முறை ஒன்று மீதமாகியது.
இலண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேன இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற நான்கு போட்டிகளில் 2–1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 ஓடடங்களில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த சாய் சுதர்சன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நிதானமாக விளையாடியராகுல் 14 ஓடடங்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த அணித்தலைவர் சப்மன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் வீரர் ஜோஸ் டாங் வீசிய 13வது ஓவரின் ஒரு இன்ஸ்விங் யாக்ர்கர் பந்தை சாய் சுதர்சன் எதிர்கொண்டு கீழே விழுந்தார். அப்பந்து அவரது கால்களில் பட்டுச்சென்றது போன்று இருந்ததால் அதற்கு இங்கிலாந்து வீரர்கள் எல்.டபிள்யூ முறையிலான ஆட்டமிழப்பை கோரினர்.
பொதுவாக அது போன்ற சூழ்நிலையில் நடுவர்கள் ஆட்டமிழைப்பை வழங்குவர் அல்லது அது ஆட்டமிழப்பு இல்லையென தலையசைப்பர். இது இரண்டும் இல்லாவிட்டால் ஒன்றும் செய்யாது அமைதி காப்பார்கள். சர்தேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளுக்கேற்ப டி.ஆர்.எஸ் (Decision Review System) முறையின் கீழ் வீரர்கள் மூன்றாம் நடுவரிடம் ஆட்டமிழப்பு கோரும் 15 வினாடிகள் வரை நடுவர்கள் அமைதியாக இருப்பர்.
ஆனால் நடுவர் குமார் தர்மசேன அது குறித்து யோசிக்காமல் ஆட்டமிழப்பு கோரிய இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோஸ் டாங்கிடம் அப்பந்து துடுப்பில் பட்டு சென்றதாக அதாவது Inside edge என்ற அர்த்தப்படும் வகையில் தனது விரல்களால் சைகை செய்து காட்டினார். இதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் எவரும் மூன்றாம் நடுவரை நாடும் எண்ணத்தை கைவிட்டனர்.
பின்பு அப்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தை பார்த்த போது குமார் தர்மசேன கூறியது சரியானதாகவே இருந்தது. ஜோஸ் வீசிய பந்து சாய் சுதர்சனின் துடுப்பில் பட்டே சென்றுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு டி.ஆர்.எஸ் முறை ஒன்று மீதமாகியது. தர்மசேன அவ்வாறு செய்திருக்காவிடின் இங்கிலாந்து அணியினர் நிச்சயமாக மூன்றாம் நடுவரை நாடியிருப்பர். அவர்களுக்கு ஆட்டமிழப்பு முறை ஒன்று வீணாகியிருக்கும். அணி ஒன்றுக்கு மூன்றாம் நடுவரை கோரும் டி.ஆர்.எஸ்.முறைகள் மூன்று இருக்கின்றன என்பது முக்கிய விடயம்.
இந்த சம்பவத்தை கண்ணுற்ற இந்திய ரசிகர்கள் விதிமுறையை மீறி இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்து கொண்ட தர்மசேனாவை சமூக வலைதளங்களில் விளாசி வருகிறார்கள். இதற்கு காரணங்கள் உள்ளன. நான்காவது போட்டியில் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து 3 ரிவியூக்களையும் தவறாக எடுத்து இழந்தது. அதே போல அந்த ரிவ்யூவையும் இங்கிலாந்து இழந்திருக்கும். அதனால் குறைந்தபட்சம் 15 நொடிகள் அமைதியாக இல்லாமல் இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்து கொண்டதை அவர்கள் விதிமுறையை மீறிய நடுவர் என குற்றஞ்சாட்ட தொடங்கியுள்ளனர்.
தர்மசேனாவின் சைகையால் இங்கிலாந்தின் ஒரு ரிவியூ காப்பாற்றப்பட்டது. இது இந்திய அணிக்கு பாதகமாகப் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் விதிகளின்படி, ஒரு நடுவர் தனது முடிவிற்கான காரணத்தை, குறிப்பாக டி.ஆர்.எஸ் வாய்ப்பு இருக்கும்போது, களத்தில் உள்ள வீரர்களுக்கு அதை தெரிவிக்கக் கூடாது. இது ஆட்டத்தின் நியாயமான போக்கைப் பாதிக்கக்கூடும் என்பது பொதுவான கருத்து.
எனினும் தர்மசேனவின் இந்த செய்கை குறித்து அப்போது போட்டி வர்ணணை செய்து கொண்டிருந்த முன்னாள் வீரர்களும் தமது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர். தர்மசேன ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், கூறுகையில் "தர்மசேனா தனது பழைய பழக்கத்தின் காரணமாக இப்படிச் செய்திருக்கலாம். அவர் அம்பயரிங் செய்ய ஆரம்பித்த காலத்தில் டி.ஆர்.எஸ் விதிகள் இல்லை. ஆனால், தற்போதைய சூழலில், நடுவர்கள் தங்கள் மனதில் உள்ளதைச் சைகை மூலம் காட்டக்கூடாது. இது பந்துவீசும் அணிக்கு ஒரு குறிப்பைக் கொடுக்கும். அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார் .
ஆனால் இங்கிலாந்து வீரர்களோ குமார் தர்மசேனவின் செய்கையைப்பற்றி ஒன்றும் கூறாது இந்திய அணியை கேலி செய்யும் முகமாக கருத்து கூறி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் ஆதர்டன் இது குறித்து கூறுகையில் இங்கிலாந்து தங்களது ரிவியூக்களை வீணாக்க வேண்டும் என்றுதான் இந்தியா விரும்பும் என்று வர்ணனையின் போது குறிப்பிட்டார். இது இந்திய இரசிகர்களின் எரிச்சல்களை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இரசிகர்கள் பலரும் தர்மசேனாவின் செயலை விமர்சித்து, இது நடுநிலைமைக்கு எதிரானது என்று பதிவிட்டு வருகின்றனர். இந்தத் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியின் முதல் நாளிலேயே எழுந்துள்ள இந்தச் சர்ச்சை, ஆட்டத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது என்பதும் முக்கிய விடயம். இதே வேளை குமார் தர்மசேனவின் இந்த செய்கை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மீது ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ரீதியில் இந்திய இரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.