Thursday, April 2, 2026

தகவல் அறியும் உரிமையை வலுப்படுத்திய இரு தீர்ப்புகள்…!

 

 தகவல் அறியும் உரிமைச் சட்டமானது   பொது நிறுவனங்களில் இடம்பெறும் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு பொது மக்களுக்கு உள்ள உரிமையின் அடிப்படையில்  ஜனநாயக நாடுகளில் அமுலில் உள்ளது. அந்த வகையில் எமது நாட்டில்   2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (சுவுஐ)இ சாதாரண பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வலிமையான ஆயுதமாக கருதப்பட்டாலும்இ கூடுதலாக இச்சட்டத்தை ஊடகவியலாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுமே பயன்படுத்தி வருகின்றார்களே ஒழிய சாதாரண பொது மக்களுக்கு இச்சட்டம் பற்றிய அறிவை கொண்டு  சேர்ப்பதற்கான முயற்சிகளை ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவில்லை.

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கான வளங்கள் உரிய முறையில் வழங்கப்படாமைஇ பதவி காலம் முடிவடைந்தவுடன் ஆணைக்குழுவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை உரிய காலத்துக்கு நியமிக்காமை போன்ற காரணங்களால்இ கடந்த காலங்களில்  ஆணைக்குழு சீராக இயங்குவதில் சிக்கல்கள் நிலவியதை மறுக்க முடியாது. தகவல்களை வழங்கக் கோரி ஆணைக்குழு உத்தரவிட்டும் கூட தேசிய பாதுகாப்பு என்ற விவகாரத்தை முன் வைத்து சில தகவல்களை வழங்குவதற்கு பாதுகாப்புத் துறை அரச நிறுவனங்கள் இழுத்தடிப்பு செய்து வந்தன. உதாரணமாக இராணுவ தலைமையகம்இ கடற்படை மற்றும் வான்படை தலைமையகங்கள்இ பாதுகாப்பு அமைச்சு போன்றன. 

அதே வேளை இச்சட்டத்தின் கீழ்  பகிரங்க அதிகார சபைகளிடமிருந்து(அரச நிறுவனங்கள்)  மாத்திரமே தகவல்களைப் பெற முடியும் என்பதால் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய பல தனியார் நிறுவனங்கள்இ அமைப்புகளிடமிருந்து தகவல்களைப் பெற முடியாத சூழ்நிலையும் நிலவியது. 

எனினும் இந்த சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு  மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில்  வழங்கிய இரண்டு தீர்ப்புகள்இ மிக முக்கியமானவை. அதாவது தனியார் ஊடகங்களும்  பொதுமக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற ஆணைக்குழுவின் முடிவை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்த அதே வேளை தேசிய பாதுகாப்பை காரணங்காட்டி பொதுவானதொரு நியாயப்படுத்தலின் கீழ் தகவல்கள் வழங்குவதை மறுப்பதற்கு ‘தேசிய பாதுகாப்பு’ என்ற  விடயத்தை பயன்படுத்த முடியாது என்ற தீர்ப்பையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

  இம்மாதம் 5 ஆம் திகதி வழங்கப்பட்ட   ஊடக நிறுவனம் ஒன்றின்  மீதான   தீர்ப்பானது அனைத்து ஊடகங்களையும் இச்சட்டத்தின் கீழ்  பொறுப்பு கூற வைத்துள்ளது எனலாம். 

  2023 ஆம் ஆண்டு அலவத்துகொட பகுதியில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம் தொடர்பில் அறிக்கையிட்ட தனியார் தொலைக்காட்சி ஊடக நிறுவனம்இ   கொலை மர்மம் அம்பலமானது என்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்றும் செய்தியை ஒளிபரப்பியது. 

எனினும் இந்த செய்தி தவறானதென வாதிட்ட நபரின் தாயார்இ குறித்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றியும் மகனின் கைது மற்றும் அவரது ஒப்புதல் வாக்குமூலம்  குறித்து தொலைக் காட்சி நிறுவனம் தவறான செய்தியை ஒளிபரப்பியது என முறைப்பாட்டை முன் வைத்து அச்செய்தியை திருத்தி ஒளிபரப்புமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால் அவையணைத்தும் அலட்சியப்படுத்தப்பட்டதால் அவர் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவதென முடிவு செய்தார்.  

இருப்பினும் மேற்படி தொலைக்காட்சி நிறுவனமானது  ஒரு தனியார் நிறுவனம் என்றபடியால் இச்சட்டத்தின் கீழ் பதில்களை வழங்கவில்லை. இது தொடர்பாக  ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டதால்  கோரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில்  இரு தரப்பு சட்டதரணிகளும் ஆணைக்குழுவின் முன்பாக ஆஜரானார்கள். அச்சந்தர்ப்பத்தில் ஆணைக்குழுவின் தலைவராக விளங்கியவர் ஓய்வு பெற்ற நீதிபதி உபாலி அபேரத்ன. ஆணையாளர்களாக ஓய்வு பெற்ற நீதிபதி ரோகிணி வல்கம மற்றும் சிரேஷ்ட சட்டதரணிகளான கிஷாலி பிண்டோ ஜயவர்தனஇ ஜகத் லியன ஆராய்ச்சி ஆகியோரின் முன்னிலையில் 2024 ஆம்  ஆண்டு அமர்வுகள் இடம்பெற்றன. ஒளிபரப்பான செய்தி குறித்த உண்மைத் தன்மை சரிபார்ப்பு தகவல்களை தகவல் கோரியவருக்கு வழங்கும்படியும் தகவல் மூலங்கள் இஆதாரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் காரணமாக அவற்றை வெளியிடாமல் நிறுத்தி வைக்கலாம் என்றும் ஆணைக்குழு கூறியது.

 தாம் ஒரு பொது அதிகார சபை அல்ல என்ற வாதம் ஆணைக்குழுவின் முன்பாக தொலைக்காட்சி நிறுவனத்தால் முன் வைக்கப்பட்டாலும் ஆணைக்குழு அதை தள்ளுபடி செய்தது. ஊடக நிறுவனங்கள் தனியாராக இருந்தாலும் பொது நலன் என்ற அடிப்படையிலேயே அலை வரிசைகளுக்கு உரிமம் வழங்கப்படுகின்றது. அதை வழங்குவது அரசாங்கமே என்ற கூற்றை ஆணைக்குழு முன் வைத்தது. 

  ஆணைக்குழுவின் உத்தரவை சவாலுக்குட்படுத்திய தொலைக்காட்சி நிறுவனம்இ தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. ஊடக அமைப்பு என்ற வகையில் தமது முதன்மை நோக்கம் வணிக ரீதியான செயற்பாடு என்றும் செய்திகள் மூலம் பொது மக்களுக்கு ஒரு பயனை அல்லது நன்மையை கிடைக்கச் செய்வது ஒரு பொதுச் சேவையாக கருதப்படாது என்றும் அது வாதிட்டது. அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒழுங்குமுறை அலைவரிசை அனுமதி பத்திரத்தைப் பயன்படுத்துவதால் ஒரு தனியார் நிறுவனமானது பொதுச் சேவை அல்லது சட்டபூர்வ பணியைச் செய்யும் அமைப்பாக மாறி விடாது என்றும் ஊடக நிறுவனம் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. 

ஆனால் மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றமானது அரசாங்கத்தால்இ அதாவது வெகுசன ஊடக அமைச்சு மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மூலம் உரிமத்தைப் பெற்று அலைவரிசைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒளிபரப்பாளர்கள் ஒரு பொதுபணி அல்லது சேவைகளையே செய்கின்றார்கள் என்றும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர்கள் பொது அதிகார சபையினரே என்ற ஆணைக்குழுவின் வாதத்தை ஏற்றுக்கொண்டது. 

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர இங்கு ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டினார். அதாவது வானலைகள் (யுசைறயஎநள) பொதுச்சொத்தாகும். அவை பலதரப்பட்ட கருத்துகளையும் துல்லியமான செய்திகளையும் உறுதிப்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றும் "கோரப்பட்ட தகவலை வெளியிடுவது ஊடக  சுதந்திரத்தை பாதிப்பதாக அமையாது.  மாறாக இலங்கை அரசியலமைப்பின் 14யு பிரிவின் கீழ் தகவல் அறியும் உரிமையை வலுப்படுத்தும் இபொறுப்பு கூறலை அதிகரிக்கும் என்பதே எங்கள் கருத்து" என்று அவர் கூறினார்

  அதே போன்று கடந்த 19 ஆம் திகதி வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்இ   தகவல்களை அணுகுவதை மறுப்பதற்கு தேசியப் பாதுகாப்பை ஒரு பொதுவான காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. 

2022 ஜூலை மாதம்  அரகலய போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச   கடற்படைக்கு சொந்தமான ஒரு   கப்பலில் சென்றமை  தொடர்பாக இலங்கை கடற்படையிடமிருந்து பயண உறுதிப்படுத்தல்இ கப்பலின் விபரங்கள்இ பயணத்தின் காலம் மற்றும் பயண மார்க்கம்இ அவரோடு  சென்றவர்களின் பெயர்கள்இ அத்துடன் பயணத்திற்கான மொத்த செலவுஇ  அதற்கான கட்டணத்தைச் செலுத்தியவர் யார் போன்ற தகவல்களை  கேட்டு  2022 ஆம் ஆண்டு  செப்டம்பரில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  எனினும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5(1)(டி)(i)-ஐ மேற்கோள் காட்டிஇ தகவல்களை வெளியிடுவது தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என கடற்படை கோரிக்கையை நிராகரித்தது. கோரிக்கையாளர் ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடு செய்ததால்  2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமர்வில் பகுதியளவான தகவல்களை வழங்கும்படி (இரண்டு தகவல்கள்) ஆணைக்குழு கடற்படை தலைமையகத்துக்கு உத்தரவிட்டது. 

 அதை வழங்காத கடற்படை மேன்முறையீட்டு நீதிமன்றில்  முறையீடு செய்தது மாத்திரமல்லாது   செலவுத் தரவுகளை வெளியிடுவது   எரிபொருள் நுகர்வுஇ கப்பலின் வேகம் போன்றவற்றை வெளியிட்டால் அது மூன்றாம் தரப்பினரின் ஊகங்களுக்கு வழிவகுக்கும் என்றது.  

எனினும்  நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது. அத்தகைய விபரக்குறிப்புகள் பொதுவில் கிடைக்கக்கூடியவை   என்றும்இ எனவே தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக தகவல்களை மறைப்பதை அவை நியாயப்படுத்தாது என்றும் குறிப்பிட்டது. அரசியலமைப்பின் 14யு பிரிவின் கீழ் தகவல் பெறும் உரிமை ஒரு அடிப்படை உரிமை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய நீதிமன்றம்இ பொதுச் செலவினங்களில் வெளிப்படைத்தன்மை என்பது ஜனநாயக ஆட்சியின் ஒரு முக்கிய அம்சம் என்றும்இ நிரூபிக்கக்கூடிய ஆபத்து நிறுவப்படாத வரையில் அத்தகைய செலவினங்களை ஆராய குடிமக்களுக்கு உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டது.

கடற்படை இந்த வரம்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்று கண்டறிந்த மேல்முறையீட்டு நீதிமன்றம்இ செலவு மற்றும் பணம் செலுத்திய விவரங்களை வெளியிட உத்தரவிட்ட தகவல் அறியும் ஆணைக்குழுவின்  உத்தரவை உறுதிசெய்துஇ மேல்முறையீட்டை செலவுகள் இன்றி தள்ளுபடி செய்தது.

 எமது நாட்டில் தகவல் அறியும் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஒன்பது வருடங்களில் மேற்படி இரண்டு  தீர்ப்புகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றன. குடிமக்கள் பலம் வாய்ந்த அரசாங்கத்தையும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடக நிறுவனங்களையும் கேள்விக்கு உட்படுத்த முடியும் என்பதையும் அவை நியாயமான கோரிக்கைகளாக இருக்கும் பட்சத்தில்   தகவல் அறியும் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்கள் துணை நிற்கும் என்பதையும் இவை உறுதிப்படுத்தியுள்ளன. 

 


Thursday, March 26, 2026

இந்தியாவில் முதல் கருணைக் கொலை தீர்ப்பு…!

  

இந்திய உச்ச நீதிமன்றமானது கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை  முதலாவது கருணைக் கொலை தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இந்த சம்பவம் பல கோணங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருணைக்கொலைக்கு பல நாடுகளில்  ஒரு சேர எதிர்ப்பும் ஆதரவும் நிலவுகின்றன.  மேலை நாடுகளில் நோய்த்தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ள  வயோதிபர்களை பராமரிக்க முடியாமல் திணறும் உறவினர்கள்இ  கருணை கொலையை நியாயப்படுத்துகின்றனர். நோய்வாய்ப்பட்ட முதியோர்கள் படும் துன்பங்களிலிருந்து  அவர்களுக்கு விடுதலைப் பெற்று தருமாறு  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னும் இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்டரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே விளங்குகின்றது.

இந்தியாவில் கருணைக் கொலைக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டவர்  வயோதிபர் அல்ல. அவர் ஒரு பல்கலைக்கழக மாணவர். புதுடெல்லி காஸியபாத் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்ராணா என்ற 31 வயது இளைஞர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தொழில்நுட்பம் கற்று வந்தவர். 2013 ஆம் ஆண்டு இவர் பல்கலைக்கழக விடுதியின் நான்காம் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு மூளை பாதிக்கப்பட்டது.  கடந்த 13 வருடங்களாக நினைவு திரும்பாத நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார் ஹரிஷ்.

தனது மகன் படும் வேதனைகளால் துவண்டு போன குடும்பத்தினர் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். ஹரிஷ்ராணாவின் தந்தையும் தாயும் தனது மகனின்  கருணைக் கொலைக்கு  அனுமதி வேண்டி 2024 ஆம் ஆண்டு டெல்லி டெல்லி உயர்  நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் அது உடனடியாக சாத்தியமாகவில்லை. டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அவருக்கு மருத்துவ குழாய்கள் மூலமே நீராகார முறையில் உணவு வழங்கப்பட்டு வந்தது. அது அவரது உயிரை காப்பாற்றியதே தவிர அவரால் மீண்டும் பழைய இயல்பான நிலைக்கு திரும்ப முடியவில்லை. சிகிச்சை காரணமாக அவரது உயிர் காப்பாற்றப்பட்டு வருவதால்  பெற்றோர்களின் கோரிக்கையின் படி அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை மீளப்பெறுவதற்கு டெல்லி நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலை தோன்றியதால் குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

ஆனால் மருத்துவமனை செலவுகள் ராணாவின் குடும்பத்தினரை மிகவும் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளின. அவரை வைத்தியசாலையில் பராமரிப்பதற்கு ஒவ்வொரு மாதமும் 25 தொடக்கம் 30 ஆயிரம் (இந்திய ரூபாவில்) செலவாவதாக தெரிவித்த குடும்பத்தினர் தமக்கு இருந்த ஒரே வீட்டையும் விற்று சிகிச்சைக்கு வழங்கியுள்ளனர். அதே வருடத்தில் அவர்கள் உச்ச நீதிமன்றை அணுகினர். இச்சந்தர்ப்பத்திலேயே ஹரிஷ் பூரமாக குணமடைய வாய்ப்புகள் இல்லையென வைத்தியசாலை அறிக்கைகள் உறுதிப்படுத்தின. அதையடுத்து அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளை நிறுத்துவதற்கு அனுமதியளித்த நீதிமன்றம் அவரை கருணை கொலை செய்வதற்கும் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகின்றன.  அதாவது வீட்டில்  சிகிச்சை பெற்று வரும் ஹரிஷ்ராணா டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​க்கு கொண்டு வரப்பட்டு  அவரது உயிர்காக்​கும் கருவி​கள் படிப்​படி​யாக அகற்​றப்​பட்டு வருகிறது. அவருக்கு வழங்கப்பட்டு வரும் செயற்கை சுவாசமும் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஹரிஷ்ராணா உயிரிழந்து விடுவார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்ட நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு   இறுதி பிரியாவிடை கொடுக்கும் காட்சிகள் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளன.

அவருக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் அவர் சில நாட்கள் உயிர்வாழ்வார் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.  உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற அகிம்சாவழியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காந்தி பிறந்த மண்ணில் கருணைக் கொலை தீர்ப்பு எப்படி சாத்தியமாகியது என்ற கேள்விகள் ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில் இந்தத் தீர்ப்பை சாதகமான ஒன்றாக பலர் வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஆங்கிலத்தில் யூதோனேசியா (euthanasia)  என்றும் மேர்சி கில்லிங் (Mercy Killing)  என்றும் அழைக்கப்படும் கருணைக்கொலையை வதையா இறப்பு என்று தமிழில் கூறுகின்றனர். ஹரிஷ்ராணா  கோமா நிலையில் சுயநினைவற்று இருப்பதால் அவரது அனுமதியின்றி அதாவது அவரது விருப்பம் பெறவியலாத வகையில் அவரது உயிரை நிறுத்துவதற்கு நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பு வழங்க முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


 கருணைக் கொலை தொடர்பான நடைமுறைகள் மற்றும் சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. உலகில் முதன் முறையாக கருணைக் கொலையை சட்டரீதியாக அங்கீகரித்த நாடாக நெதர்லாந்து விளங்குகின்றது (2002)ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம்,ஸ்பெயின், போர்த்துகல், சுவிர்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளும் கனடா, கொலம்பியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் கருணைக் கொலைக்கு சட்டரீதியான அனுமதிகள் இருப்பினும்    அதை எவ்வாறு முன்னெடுப்பது என்ற விடயத்தில் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகள் உள்ளன.


ஹரிஷ்ராணா மனுவின் மீதான தீர்ப்பானது  உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின்  மூலம்  திறந்த நீதிமன்றத்தில் மக்களுக்கு முன்பாக வழங்கப்பட்டது. நீதிபதி பர்திவாலா 286 பக்கம் கொண்ட தீர்ப்பை வாசிக்கும் போது, ‘ இந்தத் தீர்ப்பு கொண்டுள்ள ஆழ்ந்த உணர்ச்சிப்பூர்வமான சுமையை நாங்கள் அங்கீகரிக்க விரும்புகிறோம். இந்தத் தீர்ப்பு ஒரு சரணடைதல் செயற்பாடு  போலத் தோன்றலாம்,ஆனால் உண்மையில் இது ஆழ்ந்த கருணை மற்றும் தைரியத்தின் செயல் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் உங்கள் மகனைக் கைவிடவில்லை. அவர் கண்ணியத்துடன் விடைபெற்றுச்செல்ல நீங்கள் அனுமதிக்கிறீர்கள். இது அவர் மீது நீங்கள் கொண்டுள்ள தன்னலமற்ற அன்பு மற்றும் பக்தியின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறதுஇ" என்று  அவரது குடும்பத்தினரை பார்த்து கூறினார்.

எனினும் ஹரிஷ்ராணாவின் விடயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள சிலர் அருணா ஷன்பக் என்ற தாதிக்கு ஏன் நியாயம் கிடைக்கவில்லையென  தற்போது  கேள்வியெழுப்பியுள்ளனர்.  மும்பையில் உள்ள கெம் எனும் வைத்தியசாலையின் தாதியான அருணா ஷன்பக், 1973 ஆம் ஆண்டு அதே வைத்தியசாலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதன் பின்னர்  குணப்படுத்த முடியாத மூளை பாதிப்புக்குட்பட்ட அவர் கோமா நிலைக்குச்சென்றார். 42 வருடங்கள்  நினைவு திரும்ப முடியாத நிலையிலிருந்த அவர் 2015 ஆம் ஆண்டு மரணத்தைத் தழுவினார்.

அருணாவின் நிலைமை. அவதானித்த எழுத்தாளர்  விரானி, 2011 ஆம் ஆண்டு  அவருக்கு கருணைக் கொலை அனுமதி கோரி உச்ச நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.  பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை குறைப்பதற்கும்   துஷ்பிரயோகங்களின்  தீவிரத்தை வெளிப்படுத்தவுமே கருணைக் கொலை வழக்கு தொடரப்பட்டாலும் இந்த வழக்கு  எந்த வழியிலும் அதற்கு உதவவில்லையென  பெண்கள் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்தியாவில் கருணைக் கொலை  கோரிக்கைகள் அதிகரித்ததையடுத்து உச்ச நீதிமன்றமானது 2018 ஆம்ஆண்டு அதற்கான வழிகாட்டல் நெறிமுறைகளை அறிவித்திருந்தது. அதாவது செயலற்ற கருணைக் கொலைக்கு (Passive Euthanasia) அனுமதி அளித்துஇ அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது. நோயாளியின் சுயமரியாதையுடன் இறக்கும் உரிமை மற்றும் 'வாழும் உயில்'  (Living Will)  ஆகியவற்றிற்கு இது சட்ட அங்கீகாரம் அளித்தது. அதன் முக்கியமான பிரிவுகள் இவ்வாறு அமைந்தன.

ஒரு நபர், கடுமையான நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி போகும் நிலையில்இ தனக்கு செயற்கை சுவாசமோ அல்லது உயிர்காக்கும் கருவிகளோ பொருத்தப்படக்கூடாது என்று முன்கூட்டியே எழுதி வைக்கும் விருப்பம். இது வாழும் உயில் என்று குறிப்பிடப்படும்.

 குணப்படுத்த முடியாத, மூளைச் சாவு அடைந்த அல்லது மீள முடியாத கோமா நிலையில் உள்ள நோயாளிகளுக்கு  உயிர்காக்கும் கருவிகளை அகற்றி, இயற்கையான மரணத்தை அனுமதிக்கலாம்.இது பயனற்ற சிகிச்சை என்ற பிரிவுக்குள் அடங்குகின்றது.

மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு, நோயாளியின் நிலையை ஆய்வு செய்து, குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்பது முக்கியமான நெறிமுறையாகும். ஹரிஷ்ராணாவுக்கு உச்ச நீதிமன்றம் கருணைக்கொலைக்கு தீர்ப்பளித்தமைக்கு மருத்துவ குழுவினரின் அறிக்கைகளே பிரதான காரணமாக இருந்தன.


இப்படி பல காரணங்கள் கூறப்பட்டாலும் காந்தியவாதிகள் இதற்கு தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானதால் அதற்கு அடுத்த கட்டத்துக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட வளர்ப்பு பிராணிகள் அல்லது சமூகத்துக்கு ஆபத்தாக வீதிகளில் திரியும் தெருநாய்களை அவசியமானால் கொல்லலாம் என காந்தி ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்த விடயமும் இங்கு மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் மக்கள் தொகையில் 146  கோடியை நெருங்கியுள்ள இந்தியாவானது கருணைக் கொலை விடயத்தில் முற்போக்குடனும் சட்டரீதியாகவும் சில தீர்மானங்களை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது  என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.


 

Tuesday, March 3, 2026

இனவாதமில்லாத ஆட்சியாளர்கள் என யாருமில்லை…!









‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக சிங்கள பெளத்தர்களை கிளர்ந்தெழச்செய்யும் நடவடிக்கைகளில் சில பேரினவாத கும்பல்கள் திட்டமிட்டு செயற்படுகின்றன. இதன் பின்னணியில் பொதுபலசேனா உள்ளிட்ட சில அமைப்புகளும் சில முன்னாள் அரசியல்வாதிகளும் செயற்படுகின்றனர். இதற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். எனவே அவர் தமிழ் பேசும் மக்களுக்கு  எதிரானவர். ஆகவே ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும்   தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் அதிலிருந்து விலக வேண்டும்…’  இவ்வாறு பல பதிவுகள் கடந்த வாரம் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன.

இவ்வாறான பதிவுகளுக்குக்  காரணம் பெப்ரவரி 20 ஆம் திகதி கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தையில் இடம்பெற்ற அனைத்திலங்கை பெளத்த மகா சம்மேளன நிகழ்வில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்தமையாகும். அவர் ஒரு சிங்கள பெளத்தர் எனவே பெளத்தம் சார்ந்த நிகழ்வில் அவரை கலந்து கொள்ள வேண்டாம் என எவரும் தடுக்க முடியாது. அது அவரது உரிமை.  அடுத்த காரணம் இந்த நிகழ்வு அரசாங்கத்துக்கு எதிரானதாகும். அரசாங்கத்துக்கு எதிராக யார் என்ன நிகழ்வை முன்னெடுத்தாலும் அதில் ஓடோடிச்சென்று கலந்து கொள்ளும் வழக்கம்  எதிர்க்கட்சித் தலைவருக்கில்லை. ஆனால் 20 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வானது தற்போதைய அரசாங்கம் பெளத்த மதத்தை  பாதுகாக்க தவறி விட்டது என்றும் அதைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த  வேண்டும் என்பதை அடிப்படையாகக்கொண்டது.   நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி கூட  பெளத்த பீடங்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவர்களாக விளங்குகின்றனர். பெளத்தத்தை பாதுகாத்தல் என்பது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அதை மீற நாட்டின் தலைவருக்கு முடியாது.

சஜித்தை இனவாதி என்று  கூறுபவர்கள்,  தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அல்லது பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளை  இனவாதமற்ற கட்சிகள் என்று கூற முடியுமா?  அக்கட்சிகளுடன்   கடந்த காலங்களில்   இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டு அமைச்சுப்பதவிகளை பெற்றவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்களா? அல்லது தற்போது இக்கட்சிகளுக்கு ஆதரவாக உள்ள முன்னாள் இந்நாள் பிரதிநிதிகள் தமிழ்த்தரப்பினருக்கு எதிரானவர்களா? சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் உருவான அனைத்து சிங்கள கட்சிகளும்   சிங்கள பெளத்த தேசியவாத கொள்கைகளுடனேயே இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கின்றன. இந்த பயணத்தை தவிர்க்க முடியாது. அக்கட்சிகளோடு  இணைந்து அரசியல் பயணம் செய்வதைத் தவிர தமிழ்க் கட்சிகளுக்கு வேறு வழியில்லை தெரிவும் இல்லை  என்பதை உரியோர் உணர்ந்து கொள்ளல் அவசியம்.

1948 ஆம் ஆண்டு இந்தியத் தமிழர்களின் குடியுரிமையை பறித்து 1983 இல் தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விட்ட   ஐக்கிய தேசிய கட்சி, 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம், 1964 இல் சிறிமா –சாஸ்த்ரி ஒப்பந்தம், பின்னர் தரப்படுத்தல் சட்டங்களை கொண்டு வந்தது மாத்திரமல்லாது முதலாவது குடியரசு யாப்பில் (1972) பெளத்த மதத்துக்கு அரச முன்னுரிமை வழங்கிய  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , 1970 களில் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அனைத்து கட்சிகளும், அதன் தலைவர்களும் இனவாத போக்குடைய மனநிலையிலும் பேரினவாத சிந்தனைகளுடன் இயங்கியதாலேயே மேற்படி சம்பவங்கள் நடந்தேறின. 

ஆனால்   அரகலயவுக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான சிங்கள பெளத்தர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  பெளத்தத்துக்கு அழிவு ஏற்பட்டு விட்டது என என பிக்குகள்  கூறினாலும் அதை கடந்து செல்லும் மனப்பக்குவத்தை நாட்டு மக்களில் கணிசமானோர் பெற்றுள்ளனர். இனவாதத்தை முன்னிறுத்தி செய்யப்படும் அரசியலை இந்த நாட்டின் மிகக்குறைந்த எண்ணிக்கையானோரே விரும்புகின்றனர் என்பதை வெளிப்படுத்துவதாக அது உள்ளது.

ஆனால் பெளத்தாலோக்க அனைத்திலங்கை பெளத்த மகா சம்மேளனமானது இந்நாட்டின் பெளத்த பிக்குகளுக்கும் ஒரு அழுத்தமான செய்தியை கூறியுள்ளது. பெளத்தத்தை முன்னிறுத்தி இனி பிக்குகளையும் ஏமாற்ற முடியாது என்பதே அந்த செய்தி. மேற்படி நிகழ்வுக்கு எட்டாயிரம் பெளத்த பிக்குகளை திரட்டி அரசை ஆட்டங்காணச் செய்வோம் என ஏற்பாட்டாளர்கள் சூளுரைத்திருந்தார்கள். எதிர்ப்பார்த்த ஆதரவு இல்லையென்பதை அறிந்து பிறகு ஐயாயிரம் பிக்குகள் என்றார்கள். இறுதியில் முன்னுறுக்கும்  குறைவான பிக்குகளே இதில் பங்கேற்றிருந்தனர். அதிலும் அதிகமானோர்  ‘பொடி ஹாமதுரு’ என அழைக்கப்படும் இளம் பிக்குகளாக காணப்பட்டனர். இனவாத போக்குடன் பெளத்தத்தை முன்னிறுத்தி பெளத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த  சங்க பிரகடன நிகழ்வில், எதிர்ப்பார்க்கப்பட்ட  பிக்குகளே கலந்து கொள்ளாத நிலையில் இந்த நிகழ்வு பிசுபிசுத்து போயுள்ளது என்று தான் கூற வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்,   புத்த சாசனம், பிக்குகள் அத்துடன் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக, நாட்டின் அனைத்துப் பிக்குகளும் பௌத்தத் தலைவர்களும் இணைந்து 'சங்கப் பிரகடனம்' ஒன்றினை வெளியிட்டனர். அதன்படி, அந்த பிரகடனம் ,  அனைத்து பிக்குகளினதும் கையெழுத்துக்களுடன்   ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக மொரட்டுவ, லுனாவ போதிராஜாராம விகாராதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைத் தலைவர்   அகலகட சிறி சுமன தேரர் குறிப்பிட்டார். இங்கு பத்து அம்சங்களைக் கொண்ட சங்க சத்தியபிரமாணம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இனி விடயத்துக்கு வருவோம். பெளத்த மகா சம்மேளன நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டமையை விமர்சிப்போர் அவர் கலந்து கொண்டிராவிட்டால் எத்தகைய விமர்சனங்களை அவர் எதிர்நோக்கியிருக்கக் கூடும் என்பதையும் யோசிக்க வேண்டும். அவருக்கு இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் பிக்குகளை கைது செய்கின்றது, பெளத்தத்தை பாதுகாக்க தவறி விட்டது என சஜித் பிரேமதாசவும் பாராளுமன்றில் பேசிக்கொண்டு தான் இருக்கின்றார். எனவே இந்த நிகழ்வு அவருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அப்படி பேசாவிட்டாலும் அவர் தீவிர பெளத்தர் என்பதை சொல்லித் தான் அறிய வேண்டும் என்பதில்லை. நல்லாட்சி காலத்தில் சஜித் வீட்டு வசதிகள் , கட்டுமானம் மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்த போதே வடக்கில் அதிக பெளத்த விகாரைகள் உருவாகின என்ற விடயத்தை மறுப்பதற்கில்லை. அச்சந்தர்ப்பத்தில் தொல்லியல் திணைக்களமும் அவரது அமைச்சின் கீழே இருந்தது. நல்லாட்சி காலத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கும் திட்டம் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டமை குறித்து அப்போது எவரும் வாய்திறக்கவில்லையென்பது முக்கிய விடயம்.

இந்நிலையில் சஜித்   தனது இடத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு என்னவெல்லாமோ முயற்சி செய்து இறுதியில் இனவாத போக்கோடு செயற்படும் கூட்டத்துடனும் ஐக்கியமாகி விட்டார் என்று இப்போது கூறப்படுகின்றது.  ஐக்கிய மக்கள் சக்தி என்பது பல கட்சிகளின் கூட்டமைப்பு ஆகும். தேர்தல் காலங்களில் மாத்திரமே இக்கூட்டணி கட்சிகள்,  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரே சின்னத்தில் போட்டியிடல் மற்றும் தேசிய பட்டியல் பங்கீடு , நிபந்தனைகள் அல்லது நிபந்தனைகளற்ற ஆதரவு போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடுகின்றன.

அதற்கு அப்பால், தமக்கு வாக்களித்த மக்களின் நிலையறிந்து அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கும் சுயாதீனமாக இயங்குவதற்கும் கூட்டணி  கட்சிகளுக்கு சுதந்திரம் உள்ளன. யாரும் எவரையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து தேர்தல்களில் போட்டியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியும் முஸ்லிம் காங்கிரசும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதை அவதானிக்கலாம். தமது மக்கள் பிரச்சினைகளைப் பற்றி இப்பிரதிநிதிகள் கேள்வியெழுப்புகின்றனர். விவாதம் செய்கின்றனர். எதிர்க்கட்சியிலிருந்தாலும் ஆளும் கட்சி கொண்டு வரும் நல்ல விடயங்களுக்கு வரவு செலவு திட்டத்திலும் வாக்களித்துள்ளனர்.  தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில்  தமிழ் முற்போக்குக் கூட்டணி வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தது. அதே போன்று ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அவ்வாறே ஆதரவாக வாக்களித்தது.

இந்த யதார்த்தங்களையும் தெளிவையும் விமர்சனங்களை முன்வைப்போர் விளங்கிக்கொள்ளல் அவசியம். தமிழ்த் தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து ஏன் தனித்துவமாக இயங்க முடியாது என சிலர் நாட்டின் அரசியல் வரலாற்றை அறியாமல் பேசலாம். பெரும்பான்மை  சிங்கள மக்களைக் கொண்ட இலங்கையில், அம்மக்களை ஒன்றிணைந்து பிரதிநிதித்துவம் செய்ய முடியாமல் தான்  இன்று  சிங்கள கட்சிகளே பிரிந்தும் தனித்தும் நின்று அரசியல் செய்கின்றன. சிங்கள தேசிய கட்சிகளுடன் இணைந்து அரசியல் பயணத்தை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தமிழ்க் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளமைக்குக் காரணம் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்களாகும்.  இதையும் விளங்கிக்கொள்ளல் அவசியம். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து சம்பவங்களையும்  இன்று வரை வரிசைப்படுத்தி பார்த்தால் அதற்குக் காரணமான அனைத்து தேசிய சிங்கள கட்சிகளும் இனவாதக் கட்சிகளாவே விளங்குகின்றன. காலத்துக்குக் காலம் அக்கட்சிகளுக்கு தலைமை தாங்கி ஆட்சி பீடமேறிய அனைவருமே இனவாதத்தையும் அதற்குக் கவசமாக பெளத்தத்தையும் முன்னிறுத்தியே ஆட்சி செய்துள்ளனர் என்பதே உண்மை. இதில் சஜித்தை நோக்கி மாத்திரம் விரல் நீட்டுதல் நியாயமாகாது.

 

 

 

 

 


Thursday, January 29, 2026

விதைக்காமல் எவ்வாறு அறுவடை செய்வது?

  



தேசிய  மக்கள் சக்தி அரசாங்கமானது  சகல   பண்டிகைகளையும் சமய நிகழ்வுகளையும்  தேசிய ரீதியாக அனுஷ்டிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இனங்களிடையே தேசிய நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இதை கருதலாம். கடந்த வருடம் தேசிய வெசாக் தினம் நுவரெலியாவில்  அனுஷ்டிக்கப்பட்டது. அதே போன்று தேசிய தீபாவளி பண்டிகை அட்டன் மாநகரில் கடந்த வரும் அரசாங்கத்தின் அனுசரணையோடு கொண்டாடப்பட்டது.  

இந்த வரிசையில் தேசிய பொங்கல் விழா    கடந்த 17 ஆம் திகதி    அட்டன் மாநகரில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு தேசிய பொங்கல் விழா எனக் கூறப்பட்டாலும் அரசாங்கம் நேரடியாக இதில்  அனுசரணை வழங்கியிருக்கவில்லை.  இந்த நிகழ்வானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ‘ ஒற்றுமையை விதைப்போம் நாடு முழுவதும் அறுவடை செய்வோம் ‘ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. நாட்டின் இளைஞர் சமூகங்களின் அபிவிருத்திக்காகவும் மேம்பாட்டுக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு அரச நிறுவனமாக இளைஞர் சேவைகள் மன்றம் விளங்குவதால்இ மன்றம் முன்னெடுக்கும் தேசிய ரீதியான நிகழ்வுகளுக்கு அரசாங்கமே பின்புலமாக செயற்படுகின்றது எனக் கூறலாம்.  ஒன்பது மாகாணங்களிலும் இயங்கும் இளைஞர் குழாமினை ஓரிடத்தில் ஒன்றிணைத்து இந்த பொங்கல் விழாவை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எங்கு நடத்துவது என  சில மாகாணங்களில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் சில இடங்களில் அதற்கான சம்மதங்கள் பெறப்படவில்லையென அறிகிறோம்.

இறுதித்தருணத்திலேயே மத்திய மாகாணத்தின் அட்டன் நகரில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. வடக்கு கிழக்குக்கு வெளியே அதிகம் தமிழர்கள் வாழ்ந்து வரும் மாகாணமாக மத்திய மாகாணம் விளங்குகின்றது.  அதில் தமிழர்கள் செறிந்து வாழக் கூடிய மாவட்டமாக நுவரெலியா விளங்குவதால் அங்குள்ள பிரதான நகரான அட்டனில் இதை நடத்துவதற்கு இறுதித் தருணத்தில் தீர்மானிக்கப்பட்டு 13 ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நிகழ்வை 17 ஆம் திகதி நடத்துவதற்கு முடிவு காணப்பட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் சமய அனுஷ்டானங்களையும்இ கலை நிகழ்வுகளை ஆலய வளாகத்திலும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அன்றைய தினம் இரவு அட்டன் பஸ் தரிப்பிட வளாகத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இசைக்குழுவினதும் நடன குழுவினரதும் பங்களிப்புடனான இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

தேசிய சேவைகள் மன்றம் மற்றும் அதனோடு இணைந்து செயற்படும் இளைஞர்கள் கழகங்களின் பங்களிப்போடு இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இளைஞர் அணியினரின் தலையீடுகளும் பங்களிப்புகளும் இதில் இடம்பெற்றிருந்தன. ஒரு மாகாணத்துக்கு ஐம்பது பேர் என்ற கணக்கில் ஒன்பது  மாகாணங்களிலிருந்தும் நானூறுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் பஸ்களில் அட்டனுக்கு வருகை தந்திருந்தமை முக்கிய விடயம். மட்டுமின்றி அட்டன் புகையிரத நிலைய மேடையில் சுமார் ஆயிரம் பேருக்கு வாழை இலையில் மதிய உணவும் பரிமாறப்பட்டது. 

மேற்படி  நிகழ்வு ஏனைய மாகாணங்களிலிருந்து வருகை தந்திருக்கக் கூடிய  இளைஞர்களுக்கு புதிய அனுபவங்களை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் அட்டன் பிரதேச இளைஞர்களுக்கும்இ மக்களுக்கும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கும் இந்த நிகழ்வு சில கசப்பான உணர்வுகளையும் ஏற்படுத்த தவறவில்லை.

இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழிலேயே தொனிப்பொருள் உணர்த்திய ஒற்றுமை காணாமல் போயிருந்தமை  முக்கிய விடயம். தொனிப்பொருள் மாத்திரமே தமிழில் எழுத்துப் பிழையுடன் காணப்பட்ட அதே வேளை ஏனைய தகவல்கள் சிங்கள மொழியில் இருந்தன. நிகழ்வு இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாக அட்டன் நகரின்  சில பகுதிகளுக்கு மாத்திரம் இந்த அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டன. அழைப்பிதழில் தமிழை காணவில்லையே என சில தமிழ் இளைஞர்கள் தமது கொதிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.  சமூக ஊடகங்களில் இது பேசு பொருளாகியிருந்தது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேச இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள் இதற்கு பொறுப்பான பதில்களை தரவில்லை.

அழைப்பிதழை தலைநகர் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிர்வாகிகளே அச்சிட்டனர் என்றும் தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென தமது பொறுப்பிலிருந்து நழுவிச்செல்லவே முயன்றனர். முழுமையான தமிழ் மொழியில் வேண்டுமென்றால் மறுநாள் அழைப்பிதழ் அச்சிட்டு தருகிறோம் என்ற சமாளிப்பு வார்த்தைகளும் வெளியாகியிருந்தன. அழைப்பிதழில் மொழி பிரச்சினை இவ்வாறு இருந்த அதே நேரம் நகரில்  பல முக்கியஸ்தர்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும்  அழைப்பிதழே வழங்கப்படவில்லையென்பது மற்றுமொரு சர்ச்சையானது. அட்டன் நகரின் முக்கியஸ்தர்கள் பல பேர் தமது பிரதேசத்தில்  இப்படி ஒரு நிகழ்வு இடம்பெறுவது குறித்து அறிந்திருக்கவில்லையென்றும் எவரும் அழைப்பிதழ் தரவில்லையென்றும் தெரிவித்தனர். மிக முக்கியமாக இந்நிகழ்வு குறித்து  ஊடகங்களுக்கு தெளிவூட்டலோ அல்லது அழைப்பிதழோ வழங்கப்படவில்லை.  

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பெருந்தோட்டப்பகுதி மக்கள் மற்றும்  அங்கு வாழ்ந்து வரும் இளைஞர் சமூகத்தினரின் பிரசன்னம் இந்நிகழ்வில் இடம்பெற்றிருக்கவில்லை. காரணம் அவர்களுக்கும் இது குறித்த எந்த தகவல்களும் தெரிந்திருக்கவில்லை. நாட்டின் ஒன்பது மாகாணங்களிலுமுள்ள இளைஞர் யுவதிகள் அட்டன் நகருக்கு வந்தடைந்தாலும் அட்டன் பிரதேசத்தை அண்மித்த நகரங்கள் மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளிலிருந்து எவருக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான  சில குறைபாடுகளுக்குப்பின்னரே இந்த நிகழ்வு மிகவும் அவசர அவசரமாக இறுதித் தருணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்தது. பொங்கல் பண்டிகையின் பாரம்பரியம்இ அது உணர்த்தும்  தத்துவங்களை ஏனைய இனத்தவர்கள் புரிந்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெறவில்லையென்ற குறை முன்வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் கருப்பொருளுக்கமைய ஒற்றுமையை எங்கு விதைப்பது யார் அதை அறுவடை செய்யப்போவது என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்திருந்தன. 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முயற்சியையும் அர்ப்பணிப்பையும் நிச்சியம் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையை அதுவும் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் ஒரு பிரதேசத்தில் கொண்டாடும் போது எத்தகைய முன் ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருத்தல் அவசியம்.  நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பத்து பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் பத்து இளைஞர் சேவைகள் அதிகாரிகளில்  மூன்று பேர் மாத்திரமே தமிழர்கள்.  நுவரெலியாஇ தலவாக்கலை மற்றும் நோர்வூட் பிரதேச செயலகங்களில் இவர்கள் கடமையாற்றுகின்றனர்.  இந்நிகழ்வை வெற்றிகரமாக்குவதற்கு தம்மால் இயன்ற பங்களிப்பை இவர்கள் வழங்கியிருந்ததையும் சுட்டிக்காட்ட வேண்டும்.   மேற்படி நிகழ்வை முன்னெடுப்பதற்கான மனித வளம்இ நிதிஇ போக்குவரத்து  ஆகியவற்றில் நிலவிய  பற்றாக்குறைகள் இந்நிகழ்வு உரியோரை சென்றடைவதற்கு தடையாக இருந்திருக்கலாம்.

ஆனால் அரசாங்கம் இதற்கு பிரத்தியேகமாக சில பங்களிப்புகளை வழங்கியிருக்கலாம் என்பது பலரினதும் கருத்தாக உள்ளது. இலங்கையில் சமாதான நகரம் என்ற பெயர் அட்டனுக்கு உள்ளது. மலையக மக்களின் நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக தேசிய மக்கள் சக்தியினரால் உருவாக்கப்பட்ட தீர்வுகள் அடங்கிய ஆவணத்தொகுப்பின் பெயர் ‘அட்டன் பிரகடனம்’ என்பதாகும்.   அதை அட்டனில் வைத்து வெளியிட்டவர் இப்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆவார். எனவே அட்டன் நகரில் ஏற்பாடு செய்யப்படும் தேசிய நிகழ்வுகளுக்கு அதன் முக்கியத்துவம் கருதி  ஒரு வகையில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டிய தேவை ஒன்று உள்ளது.

தேசிய இளைஞர் பொங்கல் நிகழ்வின் கருப்பொருள் ஒற்றுமையை விதைப்போம் நாடு முழுவதும் அறுவடை செய்வோம் என்பதாக இருந்தது. ஒன்பது மாகாணங்களிலிருந்தும் வருகை தந்த சுமார் ஐநூறு பேர் ஒன்பது பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தமக்குள் அவர்கள் கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஒற்றுமையையும் விதைத்திருக்கலாம்இ ஆனால் பொங்கல் விழா இடம்பெற்ற அட்டன் மற்றும் அதனை சூழவுள்ள பெருந்தோட்டப்பகுதி இளைஞர்கள் எத்தனைப் பேரை இவர்கள் சந்தித்தனர்இ ஒற்றுமையை விதைத்தனர் என்ற கேள்வி இப்பகுதி மக்களிடையே உள்ளது. நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் எவரும் இதில் கலந்து கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு உரிய முறையில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டனவா என்பது தெரியவில்லை. ஒற்றுமையை விதைப்பது பற்றி எவரும் பேசலாம்இ கருத்துத் தெரிவிக்கலாம். ஆனால் அதை எங்கு எப்படி விதைப்பது என்பது பற்றிய தெளிவு மிக அவசியம். விதைத்த பின்னர் அதை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பது அதை விட பிரதானமான செயல். விதைக்கவே இல்லை எனும் போது எவ்வாறு அறுவடையைப் பற்றி பேசுவது?