இலங்கையில் பல நூற்றுக்கணக்கான வலை தளங்கள் இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமூக ஊடகங்களில் மறைமுகமாக வர்த்தக பொருட்களை சந்தைப்படுத்துவது போன்ற பக்கங்களை ஆரம்பித்து விட்டு பின்பு பாலியல் சேவைகளை வழங்கும் தொடர்புகளை உள்பெட்டியின் ஊடாக இதோடு சம்பந்தப்பட்ட சிலர் மேற்கொண்டு வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலியல் தொழிலில் 18 வயது முதல் 27 வயது வரையான பெண்கள் ஈடுபடுத்தப்படுவதுடன் சிலர் தன்னிச்சையாகவே இதில் ஈடுபட்டு வருவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை மசாஜ் சேவைகள் என்ற பெயரிலும் இவ்வாறான பாலியல தொழில்கள் முன்னெடுக்கப்படுவதாக சைபர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்த வர்த்தகத்தை முன்னெடுப்பது அவர்களுக்கு செலவு குறைவு மாத்திரமல்லாது சட்டத்தின் ஓட்டங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இலங்கையில் இணைய வழி பாலியல் வர்த்தகம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது நாட்டில் உல்லாசப்பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் தமது பொருளாதார நெருக்கடிகளை நிர்வர்த்தி செய்து கொள்ள பல வயது குறைந்த பெண்கள் இதில் நாட்டம் காட்டி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் பல நூற்றுக்கணக்கான வலை தளங்கள் இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமூக ஊடகங்களில் மறைமுகமாக வர்த்தக பொருட்களை சந்தைப்படுத்துவது போன்ற பக்கங்களை ஆரம்பித்து விட்டு பின்பு பாலியல் சேவைகளை வழங்கும் தொடர்புகளை உள்பெட்டியின் ஊடாக இதோடு சம்பந்தப்பட்ட சிலர் மேற்கொண்டு வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலியல் தொழிலில் 18 வயது முதல் 27 வயது வரையான பெண்கள் ஈடுபடுத்தப்படுவதுடன் சிலர் தன்னிச்சையாகவே இதில் ஈடுபட்டு வருவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை மசாஜ் சேவைகள் என்ற பெயரிலும் இவ்வாறான பாலியல தொழில்கள் முன்னெடுக்கப்படுவதாக சைபர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்த வர்த்தகத்தை முன்னெடுப்பது அவர்களுக்கு செலவு குறைவு மாத்திரமல்லாது சட்டத்தின் ஓட்டங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர். இணைய வழியாக பல பொருட்களை வர்த்தகம் செய்வோர் கூட மறைமுகமாக பாலியல் தொழிலை இதன் மூலம் ஊக்குவிப்பதோடு அதில் பங்குதாரர்களாகவும் உள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில விசாரணைகளின் போது இவ்வாறு இயங்கும் வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் தம்மை வியக்க செய்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். சில பட்டியல்களில் சுமார் ரூ. 10,000 விலையில் "தாய்லாந்து முழு உடல் மசாஜ் ரூ. 1,000 முதல் ரூ. 10 நிமிடங்கள் வரை நேரடி வீடியோ அமர்வுகள், 30 நிமிடங்களுக்கு 10,000 ரூபாய், மற்றும் நேரடியான சந்திப்புகளுக்கு ரூ. 8,000 முதல் ரூ. 30,000 வரை இங்கு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. தரகர்கள் மூலம் பாலியல் தொழிலை முன்னெடுத்த காலம் மலையேறி விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது திறன்பேசியை இயக்கத் தெரிந்த எவருமே இப்போது தொடர்புகளை தனித்துவமாக பேணி வருகின்றனர். இதன் காரணமாக குற்றச்சம்பவங்கள் இடம்பெற்றாலும் அதை அவர்களே எதிர்கொள்ள வேண்டிய சூழல் எழுந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருகை தரும் உல்லாசப்பயணிகளோடு பயணித்தல், தொடர்புகளை வைத்துக்கொள்ளல், அளவுளாவுதல் போன்ற செயற்பாடுகள் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவை. அதற்கு எவருக்குமே சுதந்திரம் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாலியல் தொழிலை வைத்து நிதி மோசடிகளும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இது குறித்து முறைப்பாடு செய்தால் சமூகத்தில் தமக்கு களங்கம் ஏற்படும் என்றும் ஏமாற்றியவர்கள் இதை பாலியல் தொழிலோடு சம்பந்தப்படுத்தி அவர்களை மாட்டிவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதால் சில பெண்கள் அதை தவிர்க்கும் அதே வேளை பாரிய பண இழப்புகளுக்கும் முகம் கொடுப்பதாக தெரியவருகின்றது.
பொது வெளிப்பாடு அல்லது சமூக களங்கம் குறித்த பயத்தால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் யோசிக்கின்றனர். முறையான புகார்களைப் பதிவு செய்வதை இது தடுக்கிறது, இது சட்ட நடவடிக்கையை கடினமாக்குகிறது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் பொருளாதார அழுத்தங்கள் பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடத் தூண்டியுள்ளன என்பது தெரியவந்தது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குறைந்து வரும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால், ஆயிரக்கணக்கானோர் பிழைப்புக்கான ஒரு வழியாக டிஜிட்டல் பாலியல் வர்த்தகத்தை நோக்கி திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது, சிலர் இந்த சேவைகளிலிருந்து குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டுகின்றனர்.
இது குறித்து ஒரு சில முறைப்பாடுகளை மாத்திரமே தாம் பெறுவதாகக் கூறும் பொலிஸார் அண்மையில் இடம்பெற்ற இது தொடர்பான வழக்கு விசாரணைகள் பற்றி அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். கட்டிளம் பருவ ஆண்/பெண் இருபாலரையும் குறித்து வைத்து சிலர் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அதாவது குறித்த பருவத்தினரை இலக்கு வைத்து பாலியல் வீடியோக்களை இணையத்தில் தரவேற்றம் செய்கின்றனர். அதை பார்வையிட ஒரு தொகை கட்டணம் இணைய வழியாகவே செலுத்தப்படல் வேண்டும். பாடசாலை செல்லும் மாணவர்களும் தற்போது கடன் அட்டைகளை கொண்டிருப்பதால் அவர்கள் தமது திறன்பேசி வழியாக அதை கண்டு களிக்கின்றனர்.
16 –-22 வயதுடைய பார்வையாளர்களை குறிவைத்து இணையத்தில் நேரடி பாலியல் வீடியோக்களை விநியோகித்ததாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினர் ஹொரணையில் அண்மையில் கைது செய்யப்பட்டனர். 23 வயதுடைய பெண் மற்றும் 25 வயதுடைய ஆண் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிகரித்து வரும் இ ந்த சமூக சீர்கேடு குறித்து பொலிஸார் விழிப்புடன் இருப்பதாகவும், இந்த சேவைகள் பெரும்பாலும் 18 முதல் 27 வயதுடைய பெண்களையும் சில வயதுக்குட்பட்ட சிறுமிகளையும் உள்ளடக்கியதாகவும், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் செயலிகள் மூலம் பணம் செலுத்தி நட்புத் தேடல் என்ற பெயரில் பின்பு அது பாலியல் தொடர்பாக மாறுகின்றது என பொலிஸ் பேச்சாளர் எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்களைத் தடுக்கவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாக்கவும் பொலிஸ் பிரிவினர் கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்வதாக அவர் கூறினார்.
18 வயதுக்குட்பட்ட எவருடனும் உடலுறவு கொள்வது இலங்கை சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது, அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் கூறுகின்றது. ஆனால் பாடசாலை மாணவர்களையும் ஈர்க்கச் செய்து இதில் இணையச் செய்யும் பாரதூரமான செயற்பாடுகள் மிகவும் ஆபத்தானவையாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கை ஜனவரி 2024 இல் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் இணையவழி உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதையும் இணையவழி துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தடைசெய்யப்பட்ட இணையவழி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை உள்ளடக்கத்தை அகற்றவும் வழக்குத் தொடரவும் அதிகாரம் கொண்ட ஒரு இணயைய வழி பாதுகாப்பையே இது வலியுறுத்துகின்றது. ஆனால் இதை விரிவுபடுத்தி சட்டவிரோத இணைய வழி வர்த்தகங்களை தடை செய்யும் வழிகள் ஆராயப்படல் வேண்டும் என்று கூறப்படுகின்றது.