தமிழகத்தில் உள்ள அகதிகளில் நலனோம்பல் திட்டத்துக்கு தமிழக அரசால் 317 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இனி அவர்கள் அவர்கள் வசிக்கும் இடங்கள் அகதி முகாம்கள் என்று அழைக்கப்படாதென்றும் ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்றே அழைக்கப்படும் என்றும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
இதற்கு இலங்கை தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து வரவேற்பும் வாழ்த்துக்களும் தமிழகத்தை சென்றடைந்துள்ளன. தமிழக தொடர்பு என்பது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் தொப்புள் கொடி உறவு என்பதை வலியுறுத்தஇ இந்த சம்பவத்துக்குப்பிறகு மலையக அரசியல் பிரமுகர்கள் சிலரும் தமிழகத்தை நோக்கி பறந்துள்ளனர் என்பது முக்கிய விடயம்.
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்துக்குப்பிறகே இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்துக்குச் செல்லும் மக்கள் தொகை அதிகரித்தது. அந்த ஆண்டு முதல் அதன் பின்னரான யுத்த சூழல் காரணமாகவும் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக 59 ஆயிரம் பேராகும். அதில் 34 ஆயிரம் பேர் உரிய பதிவுகளுக்குப்பிறகு வேறு இடங்களில் வசித்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலினால் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கான பல அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களுக்கான கல்வி வசதிகள் மற்றும் உதவிகள் மெச்சத்தக்க வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக முதற்கட்டத்தில் 55 மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை தமிழக அரசே செலுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டதாரி மாணவர்களுக்கான புலமை பரிசில் தொகைகள் 5 ஆயிரம் இந்திய ரூபாயிலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை வரவேற்றிருந்த பா.ஜ.க எம்.பியான வானதி சீனிவாசன் கூடஇ மாநில அரசு அனுமதியளித்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான படகு சேவை போக்குவரத்தை ஆரம்பிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் கருத்துத் தெரிவித்திருந்தமை முக்கிய விடயம். இந்த நலனோம்பு திட்டங்கள் மூலம் தமிழக அரசுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான ஒரு அரசியல் ரீதியான இமனிதாபிமான ரீதியிலான நட்பை முதலமைச்சர் ஸ்டாலின் புதுப்பித்திருக்கிறார் எனலாம்.
தொடர்ந்தும் அகதிகளாக…?
தமிழக அரசின் இந்த திட்டங்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும் அகதி முகாம்களை தமிழர் மறுவாழ்வு முகாம் என முதலமைச்சர் மாற்றியமைத்தாலும் இந்திய குடியுரிமை சட்டத்தின் படி இவர்கள் இந்திய பிரஜைகள் அல்லர். அகதிகள் தான் என்பது கசக்கும் உண்மையாகும். இவர்களுக்கு மறுவாழ்வு என்பது அகதிகள் என்ற பதத்திலிருந்து இந்திய பிரஜைகள் என்ற அந்தஸ்த்தை வழங்குவதேயாகும். எனினும் இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் இந்தியாவானது அகதிகள் தொடர்பான சர்வதேச சாசனத்தில் இது வரை கைச்சாத்திடாத நாடாக உள்ளது. ஆகவே இந்தியா இவர்களை பிரஜைகள் அல்லாத நபர்களாகவே பார்க்கின்றதுஇ உபசரிக்கின்றது. நாட்டின் பிரஜைகள் அல்லாத நபர்கள் அகதிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு மேலதிக வரப்பிரசாங்களை சட்டத்தின் படி வழங்க முடியாது. அதாவது இவ்வாறு முகாம்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகளை பெற முடியாது. வாக்குரிமை இல்லை. அசையா சொத்துக்களையும் வைத்திருக்க உரிமையில்லை.
ஆகவே இவர்களை அகதிகளாகவே வைத்திருப்பதா அல்லது குடிரிமை சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்து இவர்களுக்கு இந்திய பிரஜைகள் என்ற அந்தஸ்த்தை வழங்க முடியுமா என இந்த விவகாரத்தை புது டெல்லி தான் கையிலெடுத்து பரிசீலனை செய்ய வேண்டும். அதே வேளை 1977 களில் பல்வேறு காரணங்களுக்காக தமது தாயக பூமியை நோக்கி இடம்பெயர்ந்த இலங்கையில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை உட்பட வாக்குரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது முக்கிய விடயம். அவர்களில் பெருந்தொகையானோர் பல அரச பதவிகளில் கோலோச்சி தற்போது ஓய்வும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இவர்கள் அகதிகள் என்ற பெயரோடும் அந்த சூழ்நிலையிலும் இடம்பெயர்வை மேற்கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் இந்திய அரசானது 2005 ஆம் ஆண்டில் இந்திய குடியுரிமை சட்டத்தில் அறிமுகப்படுத்திய வெளிநாட்டு இந்திய குடியுரிமை (Overseas Citizenship of
India (OCI) என்ற சட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழ்ந்து வரக்கூடிய இந்திய வம்சாவளி மக்களை ஒன்றிணைக்கவும் அவர்களின் மூலம் இந்தியாவில் முதலீடுகள் மற்றும் ஏனைய வர்த்தக தொடர்புகளை பேணவும்இ கலாசார உறவுகளை தக்க வைக்கவுமே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நான்கு தலைமுறைகளுக்கு முற்பட்ட காலத்தில் கூட இந்தியாவில் தமது வேர்களைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளியினர் அதை நிரூபிக்கும் ஆவணங்களை கொண்டிருந்தால் வெளிநாட்டு இந்திய குடியுரிமை என்ற அந்தஸ்த்தை கொண்ட அட்டையை பெற தகுதியுள்ளவர்களாக கணிக்கப்பட்டனர். இது ஓர் மட்டுப்படுத்தப்பட்ட இரட்டை குடியுரிமை சலுகை என வர்ணிக்கப்பட்டது. இதன் மூலம் இவ் அட்டையை கொண்டிருப்பவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் விசா இன்றி இந்தியாவுக்குள் உட்பிரவேசிக்கலாம். எவ்வளவு நாட்களும் தங்கலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமை கிடையாது. அசையா சொத்துக்களை வாங்க வேண்டுமானால் ஏற்கனவே அவர்களது இரத்த வழி உறவினர்கள் அங்கு சொத்துக்களை வைத்திருப்பவர்களாக இருத்தல் வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதன் மூலம் இலட்சக்கணக்கானோர் பயனடைந்தனர். தமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை இந்தியாவில் முன்னெடுத்தனர். வர்த்தக தொடர்புகளை இலகுவாக மேம்படுத்தினர்.
ஆனால் இதில் முரண்பாடுகள் நீடித்தன. ஏனென்றால் 1823 ஆம் ஆண்டளவில் தமிழகத்தின் தென்னிந்திய கிராமங்களிலிருந்து உழைக்கும் வர்க்கமாக மத்திய மலை நாட்டின் பல பிரதேசங்களுக்கு வருகை தந்த தோட்டத்தொழிலாளர்களுக்கு இந்த வரப்பிரசாதங்களை அனுபவிக்க முடியாது போயிற்று. காரணம் அக்காலத்தில் தமது மூதாதையர்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டு போன்றவற்றை இவர்கள் பாதுகாத்து வைக்கவில்லை. இரண்டாவது 83 ஜுலை கலவரத்தில் பலர் இவற்றை இழந்தனர். அனைத்தும் சாம்பராகிப் போனது.
ஆதலால் இந்த வெளிநாட்டு இந்திய குடியுரிமையைப் பெற இவர்களுக்கு விண்ணப்பிக்க முடியாது போனது. எனினும் இவர்கள் சார்பாக சில ஊடகங்கள் கண்டியிலமைந்துள்ள உதவி இந்திய தூதரகத்தை அணுகின. 1948 ஆம் ஆண்டு முற்றிலுமாக வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாகிய இவர்களில் கணிசமானோர் சிறிமா– சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் தாயகம் நோக்கிச் செல்ல மிகுதியானோருக்கு பதிவு பிரஜை என்ற அந்தஸ்த்து சான்றிதழ் வழங்கப்பட்டது. (இன்றும் அப்படித்தான் உள்ளது) இவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளத்துடன் இலங்கையில் வாழ்ந்து வரும் வதிவிட பிரஜைகளே. இவர்களுக்கு இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்த்தை அரசியலமைப்பின் ஊடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டே வருகின்றன. இவ்வாறான வதிவிட பிரஜைகள் என்ற பெயரோடு வாழ்பவர்கள் இந்திய வம்சாவளியினரே ஒழிய வேறு நாட்டினர் இல்லை. ஆகவே குறித்த அந்த ஆவணத்தை ஏன் வெளிநாட்டு இந்திய குடியுரிமையைப் பெற இவர்களால் பயன்படுத்த முடியாது என்பது தான் கண்டி இந்திய உதவி தூதரகத்தில் எழுப்பப்பட்ட கேள்வி. இதை ஒரு தனிப்பட்ட விவகாரமாக எடுத்து ஆலோசனைகளைப் பெற புது டெல்லிக்கு தகவல்கள் அனுப்பப்பட்டாலும் அங்கிருந்து சாதகமான பதில்கள் இது வரை கிடைக்கவில்லையென்பது முக்கிய விடயம்.
இதே வேளை 2019 ஆம் ஆண்டு டிசம்பம் மாதம் மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டஇ பாகிஸ்தான்இ ஆப்கானிஸ்தான்இ பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்தும் பல கண்டனக்குரல்கள் எழுந்திருந்தன. இதில் ஏன் இலங்கை அகதிகளை சேர்க்க முடியாது? அவர்களுக்கு இலங்கை பெளத்தர்களால் துன்புறுத்தப்பட்டு உயிரை காப்பாற்ற கடல் கடந்து வந்தவர்கள் தாம்இ அதுவும் மது துன்புறுத்தல்களே. அப்படியானால் ஏன் கடந்த 30 வருடங்களுக்கு மேல் அகதிகளாக உள்ள இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் அப்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய உள்துணை இணை அமைச்சர் நித்தியானந்தராய்இ " இந்தியக் குடியுரிமை என்பது இ 1955 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை (யெவரசயடணையவழைn ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
அப்படியானால் இலங்கை அகதிகளை இ “அகதிகள் “ என்று அழைப்பதிலும் பார்க்க சட்டவிரோத குடியேறிகள் என்ற பெயரிலும் வைத்திருப்பதை இந்திய அரசு விரும்புகின்றதா என கேள்வி எழுப்பத்தோன்றுகின்றது.
தமிழகத்தில் அகதிகளாக இருப்பவர்களில் பலர் அங்கேயே பிறந்து முதல் தலைமுறையை தாண்டியுள்ளனர். அவர்களுக்கு இலங்கை என்பது அருகிலிருக்கும் ஒரு நாடு அவ்வளவு தான். இவர்களில் எத்தனைப்பேர் மீண்டும் இலங்கை வந்து இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கப்போகின்றனரோ தெரியாது. ஆனால் ஒரு நாட்டில் அகதி என்ற பெயரோடு இருப்பதிலும் பார்க்க ஒரு நாட்டின் பிரஜை என்ற அந்தஸ்த்தோடு இருப்பதைத் தான் எவரும் விரும்புவர் என்பதை கூறத்தேவையில்லை. தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் இவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யத் தயாரா அல்லது இதைத் தவிர்ப்பதற்கு இவர்களுக்கு இந்திய குடியுரிமையைப்பெற்றுத்தர டில்லியை ஏதாவதொரு வகையில் அணுகுமா?
No comments:
Post a Comment