Tuesday, October 7, 2008

எதிர் கேள்வி(சிறுகதை)


இன்னமும் இரண்டு நபர்களே பாக்கி அடுத்து தனது பெயர் அழைக்கப்படப்போகிறது.மனதின் திக்திக் சற்றே அதிகமாகியது அதிரனுக்கு. தனக்கு இது 10 ஆவது நேர்முகத்தேர்வு என்பது அவனுக்கு மறந்து போனது. ஒரு குழப்ப சூழலில் தான் தள்ளப்பட்டுள்ளதை போல் உணர்ந்தான் அவன். அதற்கு காரணம் இருந்தது.கடைசி ஆளாகத்தான் தன்னை அழைக்கப்போகின்றார்கள் என்பது ஒன்று மற்றது? தனக்கு முன்னே உள்ளே சென்று வந்தவர்களில் பலரும் சற்று வாய் விட்டு கதைத்துப்போன விடயம் அது.‘என்னடா இது இந்தத்தொழிலுக்கும் இவன்கள் கேட்ட கேள்விக்கும் சம்பந்தமில்லாம இருக்கு’ என்று ஒருவன் முணுமுணுத்தவாறே எரிச்சலோடு வெளியேறினான். ‘மேலிடத்திருந்து போன் வந்திருக்கும் ஏற்கனவே தெரிவு செய்தாச்சு பிரதர் நாம எல்லாம் சும்மா இங்கே வந்து காத்திருக்கோம்ஏதோ எதிர்ப்பார்த்துப்போனால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற மாதிரி இல்ல கேள்வி கேட்கிறாங்க’ இது மற்றொருவன் அருகில் வந்து தோள் தொட்டு சொல்லிப்போன ஒன்று. உனக்கும் அப்படி த்தான் மச்சான் என்று ஆறுதல் கூறுவது போல் இருந்தது. உள்ளே சென்ற 15 பேரில் 10 பேர் இப்படி முணுமுணுத்து விட்டு போனது தான் மிச்சம்.அட அப்படி என்ன தான் சம்பந்தமில்லாம கேட்கிறார்கள் உள்ளே?
‘லஷ்மன் அதிரன்’ பெயர் கூப்பிடப்பட்டது.சரி வருவது வரட்டும் என்று எழுந்து சென்று கதவை இலேசாக திறந்தான் அதிரன்.‘மே ஐ கம் இன் சேர்?
‘யெஸ்’
ஒற்றை வார்த்தை பதிலை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.உள்ளே மூவர். மைதான தலையோடு நடுநாயகமாக வீற்றிருப்பவர்தான் பெரியவரோ? மூவருக்கும் வணக்கம் செலுத்தினான்.
‘ப்ளீஸ் சிட்’
பைலை வாங்கி புரட்டினார் நடுநாயகம்.பின்பு சற்று உதட்டை பிதுக்கினார் அதிரனை நோக்கினார்.
ம்ம்ம்…மிஸ்டர் அதிரன் நீங்க தான் இந்த நேர்முகத்தேர்வில் கடைசி நபர் அப்படித்தானே?
முதலாவதாக வந்தவனிடம் இதே கேள்வியை மாற்றிகேட்டிருப்பார்களோ என்று நினைத்த அதிரன் ஆமாம் சார் என்றான்.
‘ஓ.கே இப்போ கேள்வி நேரம்’
படபட வானான் அதிரன்.
முடிந்தது அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறியாயிற்று ஆனால் என்ன பிரயோசனம் தனது முன்னோர்கள் (அது தாங்க அவனுக்கு முன் உள்ளே வந்து போனவங்க) கூறியது போல் தான் இருந்தது. விண்ணப்பித்திருக்கும் வேலை தொடர்பில் ஒரு கேள்வி கூட இல்லையே. அட மைதான தலை உதட்டை வேறு பிதுக்குகின்றதே?
‘என்ன அநியாயம் சார் இது முதலிலேயே சொல்லியிருந்தால் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லையே எங்களையெல்லாம் பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா? உங்களுக்கு தேவையான ஒருவரை தெரிவு செய்து விட்டு காலங்கடத்துவதற்காகத்தான் இந்த இண்டர்வியூவா’
வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டான் அதிரன்.
‘நாங்கள் அறிவிக்கிறோம்’ ரெண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியது தான்
‘எக்ஸ்கியூஸ்மி சார் மே ஐ ஆஸ்க் எ கொய்சன்?’
சற்று புருவம் உயர்த்திய நடுநாயகம் ‘யெஸ்’ என்றது.
‘சார் தப்பா நினைக்காதிங்க எனக்கு ஒரு சந்தேகம் இந்த வேலைக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் சம்பந்தமே இல்லையே சார்? இருந்தும் நான் அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறினேன் ஆனால் அது முக்கியம் இல்லை, நீங்கள் ஏன் இப்படி சம்பந்தமில்லாம கேள்வி கேட்டீங்க அது தான் எனக்கு தேவை?
‘மிஸ்டர் அதிரன் இங்கு வந்த 15 பேரில் 9 பேர் நாங்க கேட்ட சம்பந்தமில்லாத எல்லா கேள்விக்கும் பதில் சொன்னாங்க அதில் நீங்களும் ஒருவர். ஆனால் உங்களைப்போல யாரும் இப்படி எங்களை கேள்வி கேட்கவில்லை’
புன்முறுவலோடு கூறிய அவர் அருகிலிருந்த இரண்டு பேரையும் பார்த்து கண் சிமிட்டினார்.
என்ன நடக்கின்றது இங்கே?
‘மிஸ்டர் அதிரன் வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணங்கள் உரிய விதத்தில் பொது மக்களிடம் போய் சேருகின்றதா என்பதை கண்காணிக்கும் வேலை இது .பல ஊழல்கள் நடக்க இடமுண்டு. பலரிடம் பல கேள்விகளை கேட்டு விசாரணைகளை நடத்த வேண்டும் ஆகையால் சொன்னதை மட்டும் செய்து கொண்டிராமல் விழிப்பாக இருக்கவேண்டும் எதிர் கேள்விகள் கேட்க தைரியம் வேண்டும் அப்படியான ஒருவரை தெரிவு செய்யத்தான் இப்படி ஒரு வித்தியாச இண்டர்வியூ.நாங்க எதிர்ப்பார்த்த யாரும் எங்களை ஏன் சம்பந்தமில்லாம கேள்வி கேட்கிறிங்க என்று கேட்க திரணியற்று முணுமுணுத்து விட்டு போய்விட்டனர்.
பட் யூ?
அதே புன்முறுவல்
‘யெஸ்’ எங்க முயற்சி வீணாகவில்லை கடைசி ஆளா வந்தாலும் நாங்க எதிர்ப்பார்த்த தகுதி உங்ககிட்ட தான் இருக்கு யூ ஆர் அப்பாய்ண்ட்டட்’பின்குறிப்பு: இந்த கதையில் வரும் நாயகன் என் நண்பன் தேவஅதிரன் தான் ஆனால் அவனுக்கும் இப்படி எதிர் கேள்வி கேட்கும் விடயத்திற்கும் சம்பந்தமே இல்லைங்கோ…!

9 comments:

கபிலர் said...

எனது பெயரைப்பயன்படுத்தியதே குற்றம். அது போதாதற்கு எனக்கு கிண்டல் வெறு அடித்திருக்கிறீர். கதை நன்றாக இருக்கிறது என்றுதான் எப்பொதோ சொல்லிவிட்டேனே. இந்தப் பின்றகுறிப்பு தேவைதானா?.சரி எத்தனையோ பொய்விட்டது இதில் என்ன இருக்கிறது. என்ளனுள் இருக்கும் ஹீரோதனத்தை கொண்டு வந்ததற்கு நன்றி. - அதிரன்.

இறக்குவானை நிர்ஷன் said...

நம்ம அதிரன்ட கரெக்டர் நல்லாத்தான் இருக்குது. தாங்க முடியலப்பா..

//முன்னோர்கள் (அது தாங்க அவனுக்கு முன் உள்ளே வந்து போனவங்க) //

இங்கதான் நீங்க கலக்குறீங்க.

Unknown said...

ஹலோ இனிய நண்பா சிவா, உங்கள இப்படி என்றாலும் பார்க்க கிடைத்தில் ரொம்ப சந்தோஷம் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். Wish you all the very best

Ok matterfக்கு வருவோம்;; சிறுகதை superb….
ஹலோஅதிரன் அண்ணா உங்கள பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன் But பார்த்ததில்ல Anyway, உங்களையும் சிவாவின் blogல meet பண்ண கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம்.
அதுக்கு சிவாக்கு ஒரு சலாம்!
ஆமா அடிக்கடி உங்கள happy Digital பக்கம் பார்க்கலாமெண்டு கேள்விபட்டேனே உண்மையாவா?

இறக்குவானை நிர்ஷன் said...

ஆஹா...
டயனா தங்கச்சிக்கும் தெரிஞ்சுபோச்சா???

அதிரன்... ரூட்ட மாத்திடுவோம்!

வந்தியத்தேவன் said...

இல்லையே அதிரன் நல்ல பொடியன் என அறிந்தேன். ஒரு முறை அவருடன் உன்னிக்கிருஷ்ணனைப் பார்க்க போய் பட்டபாடு பெரும்பாடு. அங்கே அவர் இப்படிக் கேள்வி கேட்டிருந்தால் உன்னிக்கிருஷ்ணனை உடனே பார்த்திருக்கலாம்.

சிவலிங்கம் சிவகுமாரன் said...

நிர்ஷன் ஒரு சின்ன திருத்தம் டயனா உங்களுக்கு தங்கச்சி இல்ல அக்கா…!

இறக்குவானை நிர்ஷன் said...

அடடடா.....
தகவலுக்கு நன்றி தல.

Unknown said...

என்ன அக்காவா அச்சோ….. சிவா….. கவுத்திட்டங்களே ஏதும் கோபம் இருந்தால் பேசி தீர்ப்போமே ஏன் இந்த கொலை வெறி? நான் உங்களோட கா……
ஆஹா நிர்ஷன் இது தான் கேட்டு வாங்குறதோ நீங்களும் அந்த பக்கம் போறதுண்டா?????

இறக்குவானை நிர்ஷன் said...

ஆமாம் டயனா "அக்கா". படங்கள் பிரின்ட் எடுக்க அடிக்கடி போவோம்.
இப்போ சிவா அண்ணா இல்லாததால போறது குறைவு.

"புத்தரும் நிம்மதியா இருக்காறாம்"