தகவல் அறியும் உரிமைச் சட்டமானது பொது நிறுவனங்களில் இடம்பெறும் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு பொது மக்களுக்கு உள்ள உரிமையின் அடிப்படையில் ஜனநாயக நாடுகளில் அமுலில் உள்ளது. அந்த வகையில் எமது நாட்டில் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (சுவுஐ)இ சாதாரண பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வலிமையான ஆயுதமாக கருதப்பட்டாலும்இ கூடுதலாக இச்சட்டத்தை ஊடகவியலாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுமே பயன்படுத்தி வருகின்றார்களே ஒழிய சாதாரண பொது மக்களுக்கு இச்சட்டம் பற்றிய அறிவை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவில்லை.
தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கான வளங்கள் உரிய முறையில் வழங்கப்படாமைஇ பதவி காலம் முடிவடைந்தவுடன் ஆணைக்குழுவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை உரிய காலத்துக்கு நியமிக்காமை போன்ற காரணங்களால்இ கடந்த காலங்களில் ஆணைக்குழு சீராக இயங்குவதில் சிக்கல்கள் நிலவியதை மறுக்க முடியாது. தகவல்களை வழங்கக் கோரி ஆணைக்குழு உத்தரவிட்டும் கூட தேசிய பாதுகாப்பு என்ற விவகாரத்தை முன் வைத்து சில தகவல்களை வழங்குவதற்கு பாதுகாப்புத் துறை அரச நிறுவனங்கள் இழுத்தடிப்பு செய்து வந்தன. உதாரணமாக இராணுவ தலைமையகம்இ கடற்படை மற்றும் வான்படை தலைமையகங்கள்இ பாதுகாப்பு அமைச்சு போன்றன.
அதே வேளை இச்சட்டத்தின் கீழ் பகிரங்க அதிகார சபைகளிடமிருந்து(அரச நிறுவனங்கள்) மாத்திரமே தகவல்களைப் பெற முடியும் என்பதால் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய பல தனியார் நிறுவனங்கள்இ அமைப்புகளிடமிருந்து தகவல்களைப் பெற முடியாத சூழ்நிலையும் நிலவியது.
எனினும் இந்த சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய இரண்டு தீர்ப்புகள்இ மிக முக்கியமானவை. அதாவது தனியார் ஊடகங்களும் பொதுமக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற ஆணைக்குழுவின் முடிவை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்த அதே வேளை தேசிய பாதுகாப்பை காரணங்காட்டி பொதுவானதொரு நியாயப்படுத்தலின் கீழ் தகவல்கள் வழங்குவதை மறுப்பதற்கு ‘தேசிய பாதுகாப்பு’ என்ற விடயத்தை பயன்படுத்த முடியாது என்ற தீர்ப்பையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இம்மாதம் 5 ஆம் திகதி வழங்கப்பட்ட ஊடக நிறுவனம் ஒன்றின் மீதான தீர்ப்பானது அனைத்து ஊடகங்களையும் இச்சட்டத்தின் கீழ் பொறுப்பு கூற வைத்துள்ளது எனலாம்.
2023 ஆம் ஆண்டு அலவத்துகொட பகுதியில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம் தொடர்பில் அறிக்கையிட்ட தனியார் தொலைக்காட்சி ஊடக நிறுவனம்இ கொலை மர்மம் அம்பலமானது என்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்றும் செய்தியை ஒளிபரப்பியது.
எனினும் இந்த செய்தி தவறானதென வாதிட்ட நபரின் தாயார்இ குறித்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றியும் மகனின் கைது மற்றும் அவரது ஒப்புதல் வாக்குமூலம் குறித்து தொலைக் காட்சி நிறுவனம் தவறான செய்தியை ஒளிபரப்பியது என முறைப்பாட்டை முன் வைத்து அச்செய்தியை திருத்தி ஒளிபரப்புமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால் அவையணைத்தும் அலட்சியப்படுத்தப்பட்டதால் அவர் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவதென முடிவு செய்தார்.
இருப்பினும் மேற்படி தொலைக்காட்சி நிறுவனமானது ஒரு தனியார் நிறுவனம் என்றபடியால் இச்சட்டத்தின் கீழ் பதில்களை வழங்கவில்லை. இது தொடர்பாக ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டதால் கோரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் இரு தரப்பு சட்டதரணிகளும் ஆணைக்குழுவின் முன்பாக ஆஜரானார்கள். அச்சந்தர்ப்பத்தில் ஆணைக்குழுவின் தலைவராக விளங்கியவர் ஓய்வு பெற்ற நீதிபதி உபாலி அபேரத்ன. ஆணையாளர்களாக ஓய்வு பெற்ற நீதிபதி ரோகிணி வல்கம மற்றும் சிரேஷ்ட சட்டதரணிகளான கிஷாலி பிண்டோ ஜயவர்தனஇ ஜகத் லியன ஆராய்ச்சி ஆகியோரின் முன்னிலையில் 2024 ஆம் ஆண்டு அமர்வுகள் இடம்பெற்றன. ஒளிபரப்பான செய்தி குறித்த உண்மைத் தன்மை சரிபார்ப்பு தகவல்களை தகவல் கோரியவருக்கு வழங்கும்படியும் தகவல் மூலங்கள் இஆதாரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் காரணமாக அவற்றை வெளியிடாமல் நிறுத்தி வைக்கலாம் என்றும் ஆணைக்குழு கூறியது.
தாம் ஒரு பொது அதிகார சபை அல்ல என்ற வாதம் ஆணைக்குழுவின் முன்பாக தொலைக்காட்சி நிறுவனத்தால் முன் வைக்கப்பட்டாலும் ஆணைக்குழு அதை தள்ளுபடி செய்தது. ஊடக நிறுவனங்கள் தனியாராக இருந்தாலும் பொது நலன் என்ற அடிப்படையிலேயே அலை வரிசைகளுக்கு உரிமம் வழங்கப்படுகின்றது. அதை வழங்குவது அரசாங்கமே என்ற கூற்றை ஆணைக்குழு முன் வைத்தது.
ஆணைக்குழுவின் உத்தரவை சவாலுக்குட்படுத்திய தொலைக்காட்சி நிறுவனம்இ தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. ஊடக அமைப்பு என்ற வகையில் தமது முதன்மை நோக்கம் வணிக ரீதியான செயற்பாடு என்றும் செய்திகள் மூலம் பொது மக்களுக்கு ஒரு பயனை அல்லது நன்மையை கிடைக்கச் செய்வது ஒரு பொதுச் சேவையாக கருதப்படாது என்றும் அது வாதிட்டது. அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒழுங்குமுறை அலைவரிசை அனுமதி பத்திரத்தைப் பயன்படுத்துவதால் ஒரு தனியார் நிறுவனமானது பொதுச் சேவை அல்லது சட்டபூர்வ பணியைச் செய்யும் அமைப்பாக மாறி விடாது என்றும் ஊடக நிறுவனம் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
ஆனால் மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றமானது அரசாங்கத்தால்இ அதாவது வெகுசன ஊடக அமைச்சு மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மூலம் உரிமத்தைப் பெற்று அலைவரிசைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒளிபரப்பாளர்கள் ஒரு பொதுபணி அல்லது சேவைகளையே செய்கின்றார்கள் என்றும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர்கள் பொது அதிகார சபையினரே என்ற ஆணைக்குழுவின் வாதத்தை ஏற்றுக்கொண்டது.
மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர இங்கு ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டினார். அதாவது வானலைகள் (யுசைறயஎநள) பொதுச்சொத்தாகும். அவை பலதரப்பட்ட கருத்துகளையும் துல்லியமான செய்திகளையும் உறுதிப்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றும் "கோரப்பட்ட தகவலை வெளியிடுவது ஊடக சுதந்திரத்தை பாதிப்பதாக அமையாது. மாறாக இலங்கை அரசியலமைப்பின் 14யு பிரிவின் கீழ் தகவல் அறியும் உரிமையை வலுப்படுத்தும் இபொறுப்பு கூறலை அதிகரிக்கும் என்பதே எங்கள் கருத்து" என்று அவர் கூறினார்
அதே போன்று கடந்த 19 ஆம் திகதி வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்இ தகவல்களை அணுகுவதை மறுப்பதற்கு தேசியப் பாதுகாப்பை ஒரு பொதுவான காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.
2022 ஜூலை மாதம் அரகலய போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலில் சென்றமை தொடர்பாக இலங்கை கடற்படையிடமிருந்து பயண உறுதிப்படுத்தல்இ கப்பலின் விபரங்கள்இ பயணத்தின் காலம் மற்றும் பயண மார்க்கம்இ அவரோடு சென்றவர்களின் பெயர்கள்இ அத்துடன் பயணத்திற்கான மொத்த செலவுஇ அதற்கான கட்டணத்தைச் செலுத்தியவர் யார் போன்ற தகவல்களை கேட்டு 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5(1)(டி)(i)-ஐ மேற்கோள் காட்டிஇ தகவல்களை வெளியிடுவது தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என கடற்படை கோரிக்கையை நிராகரித்தது. கோரிக்கையாளர் ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடு செய்ததால் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமர்வில் பகுதியளவான தகவல்களை வழங்கும்படி (இரண்டு தகவல்கள்) ஆணைக்குழு கடற்படை தலைமையகத்துக்கு உத்தரவிட்டது.
அதை வழங்காத கடற்படை மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்தது மாத்திரமல்லாது செலவுத் தரவுகளை வெளியிடுவது எரிபொருள் நுகர்வுஇ கப்பலின் வேகம் போன்றவற்றை வெளியிட்டால் அது மூன்றாம் தரப்பினரின் ஊகங்களுக்கு வழிவகுக்கும் என்றது.
எனினும் நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது. அத்தகைய விபரக்குறிப்புகள் பொதுவில் கிடைக்கக்கூடியவை என்றும்இ எனவே தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக தகவல்களை மறைப்பதை அவை நியாயப்படுத்தாது என்றும் குறிப்பிட்டது. அரசியலமைப்பின் 14யு பிரிவின் கீழ் தகவல் பெறும் உரிமை ஒரு அடிப்படை உரிமை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய நீதிமன்றம்இ பொதுச் செலவினங்களில் வெளிப்படைத்தன்மை என்பது ஜனநாயக ஆட்சியின் ஒரு முக்கிய அம்சம் என்றும்இ நிரூபிக்கக்கூடிய ஆபத்து நிறுவப்படாத வரையில் அத்தகைய செலவினங்களை ஆராய குடிமக்களுக்கு உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டது.
கடற்படை இந்த வரம்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்று கண்டறிந்த மேல்முறையீட்டு நீதிமன்றம்இ செலவு மற்றும் பணம் செலுத்திய விவரங்களை வெளியிட உத்தரவிட்ட தகவல் அறியும் ஆணைக்குழுவின் உத்தரவை உறுதிசெய்துஇ மேல்முறையீட்டை செலவுகள் இன்றி தள்ளுபடி செய்தது.
எமது நாட்டில் தகவல் அறியும் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஒன்பது வருடங்களில் மேற்படி இரண்டு தீர்ப்புகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றன. குடிமக்கள் பலம் வாய்ந்த அரசாங்கத்தையும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடக நிறுவனங்களையும் கேள்விக்கு உட்படுத்த முடியும் என்பதையும் அவை நியாயமான கோரிக்கைகளாக இருக்கும் பட்சத்தில் தகவல் அறியும் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்கள் துணை நிற்கும் என்பதையும் இவை உறுதிப்படுத்தியுள்ளன.