
இலங்கையில் பதிவாகும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் 70 வீதத்திற்கும் மேலானவை கல்வித்துறையோடு சம்பந்தப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளமையானது இலங்கை கல்வித்துறையில் எந்தளவிற்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.கூடுதலாக பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதிலேயே அதிபர்கள் இலஞ்சம் வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமாகவோ அல்லது பொருளாகவோ அதிபர்கள் இலஞ்சம் பெறுகிறார்கள் என சுட்டிக்கா
ட்டப்பட்டுள்ளது. கடந்த கால முறைப்பாடுகளை பார்த்தால் இலங்கையைப்பொறுத்தவரை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களில் அதிகமானோர் பொலிஸ் அதிகாரிகளாவும் , அரசாங்க திணைக்களங்களைச்சேர்ந்தவர்களாகவுமே இருந்துள்ளனர்.எனினும் அண்மைக்காலமாக இலஞ்சம் மற்றும் ஊழல்களில் முதலாவது இடத்தை கல்வித்துறை பிடித்துள்ளது. சமுதாய மாற்றத்திற்கான ஒரே ஆயுதமாக கூறப்படும் கல்வித்துறையில் எட்ட வேண்டிய இலக்குகள் எத்தனையோ இருக்க இப்போது எட்டியிருக்கும் இலக்கை பார்க்கும் போது வெட்கித்தலை குனிய வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவானது (Commission to Investigate Allegations of Bribery or Corruption) நாளாந்தம் 15 இற்கும் குறையாத கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தமக்கு கிடைப்பதாகத் தெரிவிக்கின்றது. இதில் கூடுதலாக முதலாமாண்டுக்கு மாணவர்களை சேர்க்கும் போது பாடசாலை அதிபர்கள் பெற்றோர்களிடம் இருந்து பணம் பெறுவது தொடர்பாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.பாலபட்டபெந்தி விளங்குகிறார். அண்மையில் இவர் கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட ஊழல் செயற்பாடுகள் பற்றி தனது விசனத்தையும் வெளிப்படுத்த தவறவில்லை.இலஞ்சம் என்றால் என்ன?
பாடசாலைகளில் இலஞ்சம்மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிக்கும் போது ஒரு சில அதிபர்கள் தேசிய கல்விக்கொள்கைகளை மீறும் வகையில் ஒரு வகுப்பிற்கு அதிக மாணவர்களை அனுமதிக்கின்றனர். அச்சந்தர்ப்பத்தில் வெளி பிரதேச மாணவர்களை பிரபலமான நகர்ப்புற பாடசாலைகளுக்கு இந்த அதிபர்கள் உள்வாங்கும் போது அவர்களின் பெற்றோரிடமிருந்து இலஞ்சமாக பெருந்தொகை பணத்தை பெறுகின்றனர். மேலும் முதலமாண்டு மட்டுமின்றி உயர்தர அனுமதியிலும் அதிகமாக பணம் பெறுகின்றனர். இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பணமாகப்பெற்றால் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் பொருளாகவும் இலஞ்சம் பெறும் முறை பல மலையக பாடசாலைகளில் நடைமுறையில் இருக்கின்றது. பாடசாலைக்கு புதிய அலுமாரி தேவை என மாணவர் அனுமதிக்கு வரும் பெற்றோரிடம் அதிபர் கூறுவார்.பின்னர் நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்ட தளபாட வர்த்தக ஸ்தாபனத்தை கூறி அங்கு பணம் செலுத்தும் படியும் தாம் அதை பெற்றுக்கொள்வோம் என்றும் கூறி பின்னர் குறிப்பிட்ட வர்த்தக ஸ்தாபனத்திற்குச் சென்று ஒரு தொகையை ஸ்தாபனத்திற்கு செலுத்தி விட்டு மீதியை வாங்கிக்கொண்டு வந்து விடுவார் அதிபர். ஒரு சில பாடசாலைகளில் அபிவிருத்திச்சங்க செயலாளர்களே இந்த பண வசூலிப்பு விடயத்தில் முன்னிற்கின்றனர்.இதன் காரணமாக பல வருடங்களாக ஒரே சங்க செயலாளர்களே தொடர்ந்தும் பதவியில் இருக்கின்றார்கள். பல அதிபர்கள் அபிருத்திச்சபை கூட்டத்தை ஏற்பாடு செய்யாமல் இருப்பதும் இந்த பின்னணயிலே தான். பல பெற்றோர்களிடம் தளபாடங்கள் அலுமாரிகள் வாங்க வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக்கொண்டு அதிபர்கள் வாங்குவதோ ஒரே அலுமாரியைத்தான்இதே வேளை பல பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கூட வெளி மாவட்ட மாணவர்களை பணம் கொடுத்து சேர்ப்பதில் ஒரு சில அதிபர்களுக்கு உதவி ஆசிரியர்களாக செயற்படுகின்றனர். மேலும் தவணை முடியும் சந்தர்ப்பத்திலும் இடையில் பல வகுப்புகளுக்கு மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு சேர்க்கும் விடயம் பல பாடசாலைகளில் இடம்பெறுகிறது.
பெற்றோர்களின் அக்கறையின்மைதமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால் தாம் இலஞ்சம் கொடுப்பதையும் அதிபர்கள் இலஞ்சம் வாங்குவதையும் வெளியில் கூறுவதற்கு பெற்றோர்கள் விரும்புவதில்லை. இந்த காரணங்களினாலேயே பல அதிபர்கள் எவ்வித இடையூறும் இன்றி இலஞ்சம் பெற்று வருகின்றனர். இச்செயற்பாடுகளே இவர்களை ஊக்குவிப்பதாக இருக்கின்றது. இதே வேளை பாடசாலைகளில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டிய வலயக்கல்வி காரியாலயங்களிலும் அதிகார துஷ்பிரயோகங்கள் ,ஊழல்கள் இடம்பெறுவதால் பாடசாலைகளைப்பற்றி கண்டு கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மையாகும். தமக்கு தேவையானவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு சில வலயக்கல்வி பணிப்பாளர்களும் ,அதிகாரிகளும் கூட இலஞ்சம் பெறுவதை மறுப்பதற்கில்லை. இவர்களின் சிபாரிசுகளுடன் வரும் மாணவர்களை சேர்க்கும் அழுத்தத்திற்கும் சில நேர்மையான அதிபர்கள் உட்படுகின்றனர். ஆகவே கல்வித்துறை இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது பாடசாலைகளில் மட்டும் தங்கியிருக்கும் விடயமல்ல என்பதை பலரும் உணர்ந்து கொள்ளல் அவசியம்.
யார் குற்றச்சாட்டுக்கு உட்படுவர்? இலஞ்ச குற்றச்சாட்டுகளின் கீழ் அமைச்சரவை அமைச்சர்கள் , சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் , குழுக்களின் பிரதித் தலைவர் , பிரதி அமைச்சர்கள் , மாகாண ஆளுனர்கள் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் , மாகாண, உள்ளுõராட்சி நிலையங்களின் அல்லது ,லஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டநிறுவனங்களில் நூற்றுக்கு 50 விதத்திற்கு மேற்பட்ட பங்குகள் அரசுடமையாகவுள்ள 1982ஆம் ஆண்டின் 17 ஆம் ,இலக்க கம்பனிகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள், ஆளுனர்கள், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், ஜூரி சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியும். இலஞ்ச சட்டத்தின் கீழ் ,இலஞ்சம் வாங்குவதைப் போல் ,இலஞ்சம் கொடுப்பதும் சமமான தண்டனைக்குரிய குற்றங்களாகும். என்ற போதிலும் ,இலஞ்சம் கொடுத்த நபர் முறைப்பாட்டாளராகும் சந்தர்ப்பங்களில் சட்டம் குறிப்பிட்ட நபரைக் குற்றவாளியாக அல்லது ,இலஞ்சம் கேட்ட நபரின் சூழ்ச்சியால் சிக்கிய அப்பாவியாகவே கருதும்.இருந்த போதிலும் ஒருவர் ,இலஞ்சம் கேட்கும் போது அதைக் கொடுப்பதற்கு முன்பாக ,இலஞ்ச ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தல் காலச் சிறந்த செயற்பாடாகும்.
தண்டனைகள்இலஞ்சம் கேட்டல், ஏற்றுக் கொள்தல், கொடுத்தல் அல்லது ,இதில் ஏதும் ஒன்றைச் செய்ய எத்தனித்தல், சூழ்ச்சி செய்தல் போன்ற குற்றங்களின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையுடன் ரூபா 5000 இற்கும் மேற்படாத தண்டப் பணம் அபராதமாக விதிக்கப்படும். ஏதும் ஆதனமொன்று ,இலஞ்சத்தின் மூலம் பெற்றுக் கொன்டதாக நிரூபிக்கப்படும் போது மேற் குறிப்பிட்ட தண்டனைக்கு மேலதிகமாக ,இலஞ்சத்தால் பெற்றுக் கொண்டதாக தீர்மானம் செய்யப்பட்ட ஆதனத்தின் பெருமதிக்கு குறையாத அல்லது மும்மடங்கிற்கு குறையாத தொகையைத் தணடப் பணமாக நியமித்தல் அல்லது குறிப்பிட்ட ஆதனத்தை அரசுடமையாக்குதல்.
ஊழல் குற்றச்சாட்டுக்கான தண்டனைகள்ஊழல் குற்றமொன்றில் குற்றவாளியாக்கப்படின் 10 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்குச் சிறைத் தண்டனையும் ஒரு ,இலட்சம் ரூபாவை விஞ்சாத தண்டப் பணம் அல்லது மேற் கூறிய ,இரண்டும் வழங்கப்படும்.தனது தொழிலை அல்லது பதவியை இழப்பதோடு ஓய்வூதியம் பணிக் கொடைக்கான உரித்தும் ,ரத்துச் செய்யப் படும்.பாராளுமன்றத் தேர்தல் எனின் 7 ஆண்டுகளுக்கும், உள்ளுõராட்சி மன்றத் தேர்தல் உனில் 5 ஆண்டுகளுக்கும் வாக்காளராக பதிவு செய்வதற்கு, வாக்களிப்பதற்கு, தெரிவு செய்யப்படுவதற்கும் தகைமையை இல்லாதாக்கலாம்.அரசின் அல்லது ,இலஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல் படுத்தப்பட்ட நிறுவனங்களில் தொழில் ஒன்றை அல்லது பதவியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை முற்று முழுதாக ,இழத்தல் என்பன அடங்கும். கல்வித்துறைக்கு அப்பாற்பட்டு பல அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்தாடுவதை அனைவரும் அறிவர். மேலும் தனியார் நிறுவனங்கள் மீதான இலஞ்ச செயற்பாடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் இடமில்லை. அண்டைய நாடான இந்தியாவில் தலை விரித்தாடும் ஊழல்கள் இன்று உலகப்பிரசித்தி பெற்று விட்டன. எனினும் சமூக அக்கறை என்ற விடயத்தில் கல்வி சமுகத்திற்கு பாரிய கடப்பாடு உள்ளது.எதிர்கால இலங்கையை கருத்திற்கொண்டு தமது இலக்குகளை இவர்கள் உணர்ந்து கொள்வார்களாக.

ட்டாமல்

மதாது
எழுந்துள்ளன. உண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பது என்பது உண்மை,எனினும் இதை காரணமாக முன்வைத்து தொழிலாளர்களின் வேதனம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அல்லது அவர்களின் வேலை நேரத்தை அதிகரித்து அதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலை வர்த்தக சங்கம் இந்த ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி விடயத்தை பி.பி.சி செய்தி சேவை வரை கொண்டு சென்று தொழிலாளர்களின் வேதனத்தை நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என்று கூறியதால் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒரு வித குழப்ப நிலை தோன்றியது என்னவோ உண்மை .எனினும் தொழிலாளர் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வேதனம் எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என்று ஊடகங்கள் மூலம் தெரிவித்ததையடுத்தே தொழிலாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதி பிறந்தது. எனினும் ஒரு சில தோட்டக்கம்பனிகள் தொழிலாளர் வேதனம் குறைக்கப்படாவிட்டாலும் உற்பத்தி அளவை கூட்ட வேண்டும் என்றும் அதற்காக அவர்களின் பணி நேரங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து பணி நேரமானது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருவதாக சில தொழிற்சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளன. 




ஒரு சமுக அந்தஸ்த்தோடு கூற விழைந்த போது மலையகமாக அது எங்குள்ளது நீங்கள் மலைச்சாதியினரா என்ற வகையில் வினா எழுப்பப்பட்டுள்ளது. மேற்படி குழுவுக்கு தலைமை தாங்கிய கவிஞர் சு.முரளிரதன் இச்சம்பவத்தை ஒரு நிகழ்வில் வேதனையோடு கூறியதை எவர் அலட்சியப்படுத்தினாலும் எம்மால் இருக்க முடியாது என்ற நிலையிலேயே விவாதத்திற்குரிய இவ்விடயம் பற்றி எல்லோரும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம், காரணம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு நாம் குறிப்பிடும் மலையக சமுகம் அந்தப்பெயருடனேயா அல்லது வேறு பெயருடனேயா இருக்கப்போகின்றது, இயங்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக ஏன் இப்போதுள்ளவர்கள் விளங்கக்கூடாது என்ற கேள்வியும் எழாமலில்லை.