தேயிலை ஏற்றுமதி 2010 ஆம் ஆண்டு (கி.கி மில்லியன்களில்)
கென்யா 441,021
இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருளாகவும் அந்நிய செலாவணியைப்பெற்றுத்தருவதில் கணிசமான பங்கையும் வகிக்கும் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள்
எழுந்துள்ளன. உண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பது என்பது உண்மை,எனினும் இதை காரணமாக முன்வைத்து தொழிலாளர்களின் வேதனம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அல்லது அவர்களின் வேலை நேரத்தை அதிகரித்து அதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலை வர்த்தக சங்கம் இந்த ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி விடயத்தை பி.பி.சி செய்தி சேவை வரை கொண்டு சென்று தொழிலாளர்களின் வேதனத்தை நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என்று கூறியதால் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒரு வித குழப்ப நிலை தோன்றியது என்னவோ உண்மை .எனினும் தொழிலாளர் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வேதனம் எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என்று ஊடகங்கள் மூலம் தெரிவித்ததையடுத்தே தொழிலாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதி பிறந்தது. எனினும் ஒரு சில தோட்டக்கம்பனிகள் தொழிலாளர் வேதனம் குறைக்கப்படாவிட்டாலும் உற்பத்தி அளவை கூட்ட வேண்டும் என்றும் அதற்காக அவர்களின் பணி நேரங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து பணி நேரமானது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருவதாக சில தொழிற்சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளன. நெருக்கடி ஏன், எப்படி?
தொழிலாளர் வேதனமும் கூட்டு
தேயிலை வர்த்தக நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக சிலர் விஷமத்தனமான பிரசாரங்களை ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் மூலமாக முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இதன் தலைவரும் சிரேஷ்ட தொழிற்சங்க வாதியுமான ஓ.ஏ.இராமையா கருதுத்தெரிவிக்கையில் தொழிலாளர் வேதனத்தை குறைக்க பலர் பிரசாரம் செய்து வந்தனர்.ஆனால் அதற்கு சந்தர்ப்பமில்லை என்று தெரிந்தவுடன் தற்போது வேறு விதமான கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். அதாவது
1) தோட்டங்களில் உற்பத்தி திறன் மிகவும் குறைந்துள்ளது
உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசாங்கத்தின் முயற்சி
இதே வேளை இந்த விவகாரம் பிரதான தொழிற்சங்கங்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. தொழிலாளர் நலன் பேணும் விடயங்களில் அக்கறை செலுத்தாது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டுவதா என சில தொழிற்சங்க பிரமுகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தொழிலாளர் சம்பந்தப்பட்ட விடயங்களை தொழில் அமைச்சே கையாள வேண்டும் என்றும் இதை ஒரு சிரேஷ்ட அமைச்சர் மூலம் கொண்டு நடத்துவதன் உள்நோக்கம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சகல வேலைத்தளங்களிலும் இது அமுல்படுத்தப்பட்டாலும் தொழிலாளர் வர்க்கமே இதன் மூலம் பாதிப்பை எதிர்நோக்கவுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
கூட்டு ஒப்பந்தத்தில் வேலை நேரத்தை கூட்ட முடியுமா?
தற்போதைய நிலை என்ன?
கடந்த ஆறு மாத காலங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலையில் எங்ஙனம் இந்த சரிவிலிருந்து இலங்கை மீளப்போகிறது என்பது கேள்விக்குறியே. இந்த நிலைமை தொடர்ந்தும் இருப்பதாகவே பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் மாலனி பீரிஸ் தெரிவிக்கிறார். இதன் காரணமாக நாம் வேறு நாடுகளுக்கு அதிகளவான தேயிலையை ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.இலங்கை தேயிலை சபையும் பெருந்தோட்ட அமைச்சும் இது குறித்து கலந்துரையாடி சீனா ,அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகளின் உள்ளூர் தேவையை அறிந்து அங்கு தேயிலையை சந்தைப்படுத்தலாமா என யோசித்து வருவதாக அவர் தெரிவிக்கிறார். முக்கியமாக சீனாவில் இலங்கை பிளக் டீயிற்கு அதிக கிராக்கி நிலவுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
உலக சந்தையை இழக்கிறதா இலங்கை?
தேயிலை ஏற்றுமதியில் உலகில் முன்னணியில் இருந்த இலங்கையை தற்போது ஆபிரிக்க நாடான கென்யா பின் தள்ளியுள்ளது. இருப்பினும் சிறந்த இரகம் மற்றும் விலை உயர்ந்த தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் இலங்கை முன்னணியிலுள்ளது. தேயிலை தொழிற்றுரையை நம்பி நேரிடையாகவும் மறைமுகமாவும் இலட்சக்கணக்கானோர் உள்ளனர்.எனினும் சில கம்பனிகள் மீள் நடுகையில் அதிக அக்கறை காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பழைய தேயிலை மலைகள் இன்று பாகம் பாகமாக பிரிக்கப்பட்டு வெளியாருக்கு விற்கும் நிலை தோன்றியுள்ளதை மறுக்க முடியாது. அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் முக்கிய பயிர் இது என்பதிலும் பார்க்க தொழிலாளர் வர்க்கத்தின் பெருமை கூறும் ஒரு வர்த்தக பொருளாக இன்று தேயிலை விளங்குகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் சமூக நலன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்றால் மட்டுமே இத்தொழிற்றுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியும்.





ஒரு சமுக அந்தஸ்த்தோடு கூற விழைந்த போது மலையகமாக அது எங்குள்ளது நீங்கள் மலைச்சாதியினரா என்ற வகையில் வினா எழுப்பப்பட்டுள்ளது. மேற்படி குழுவுக்கு தலைமை தாங்கிய கவிஞர் சு.முரளிரதன் இச்சம்பவத்தை ஒரு நிகழ்வில் வேதனையோடு கூறியதை எவர் அலட்சியப்படுத்தினாலும் எம்மால் இருக்க முடியாது என்ற நிலையிலேயே விவாதத்திற்குரிய இவ்விடயம் பற்றி எல்லோரும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம், காரணம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு நாம் குறிப்பிடும் மலையக சமுகம் அந்தப்பெயருடனேயா அல்லது வேறு பெயருடனேயா இருக்கப்போகின்றது, இயங்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக ஏன் இப்போதுள்ளவர்கள் விளங்கக்கூடாது என்ற கேள்வியும் எழாமலில்லை.



