Wednesday, January 18, 2012

நடராஜா டீச்சர்....! சில நினைவுகள்




நமது வாழ்க்கையில் சிறு வயது ஞாபகங்கள் என்பதை பொறுத்த வரை நம்மோடு அதிகமாக அன்போடு பழகியவர்கள் அல்லது வழிநடத்தியவர்கள் ,இவர்களுக்கு அப்பாற்பட்டு எம்மோடு கடுமையாக நடந்து கொண்டவர்களையும் மறக்க முடியாது. எனினும் பாடசாலை வாழ்க்கையில் எமக்கு கல்வி போதித்தவர்களில் எக்காலமும் மறக்க முடியாத ஒரு சிலரே மனதை தொட்டு செல்கின்றனர்.எங்கு கண்டாலும் மனம் நெகிழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துபவர்கள் ஒரு சிலரே அந்த வகையில் அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் எ னக்கு அரிவரி சொல்லிக்கொடுத்த ஆசிரிய அன்னை தான் நடராஜா டீச்சர் என்று நாங்கள் வாய் ஓயாமல் அழைக்கும் ராஜேஸ்வரி டீச்சர். எனக்கு மிக நன்றாக ஞாபகம் இருக்கிறது . தரம் 2 மற்றும்தரம் 3 களில் எமது வகுப்பாசிரியராக இருந்து எமக்கு அற்புதமான கல்வியைப் புகட்டியவர். இந்த சின்ன வகுப்பில் நடந்த சம்பவங்கள் எப்படி ஞாபகம் இருக்கும் என்று பலரும் நினைக்கக்கூடும் அதற்கு வழிசமைத்தது எங்கள் கல்லூரிதான். மிகச்சிறந்த ஒழுக்க பண்புகளை போதித்து ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கக் கற்று கொடுத்த அதே நேரம் எவருக்கும் கிடைக்காத அற்புதமான ஆசிரியர்களை பெற்று ஒரு பொற்காலத்தை உருவாக்கித்தந்தது எமது கல்லூரி. நடராஜா டீச்சர் ... ஒரு ஆசிரியையாக அல்லாது தனது பிள்ளைகளாக எம்மை வளர்த்த விதம் பசுமரத்தாணியாக பதிந்துள்ளது. எமக்கு சைவசமய பாடம் எடுக்கும் நேரம் தேவாரத்தை ஒரே மூச்சில் நான் கூறுவதை கேட்டு நல்ல பிள்ளை என்று கூறியதை எப்படி மறக்க முடியும் ? எவரிடமும் பேதம் காட்டாது அனைவரையும் ஒரே பிள்ளைகளாக கருதி பாடம் போதித்தார். தரம் 5 இற்குப்பிறகு நாம் ஆரம்பப்பிரிவு கட்டிடத்தை விட்டு பிரதான கல்லூரி மண்டபத்திற்கு செல்லும் போது கண்கலங்கி டீச்சர மறந்துடாதிங்கடா இங்க வந்து பார்க்கனும் சரியா என சொன்ன காட்சி மனதை விட்டு அகல மறுக்கிறது. உயர்கல்வி கற்று பாடசாலையை விட்டு பிரிந்து சென்று பிறகும் எங்கு கண்டாலும் அதே பாசப்பிணைப்போடு கதைக்கும் பாங்கு ஒரு சில ஆசிரியர்களுக்கு உரித்தானது . அதில் முதன்மையான இருவரில் ஒருவர் நடராஜ் டீச்சர் மற்றவர் மரியதாஸ் டீச்சர். நான் கடமையாற்றும் வீரகேசரி காரியாலத்திற்கு வருகை தந்து பெருமை பொங்க என் மாணவன் நீ ,உன்னுடைய ஆக்கங்கள் ஒன்றை கூட நான் வாசிக்காமல் இருந்ததில்லை என்று சொல்லிய அந்த நாளை எனக்கு மறக்க முடியாது டீச்சர். நீங்கள் மரித்தாலும் உங்கள் ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்த்தும்.

அரிவரி சொல்லிக்கொடுத்தாய் அன்னையாய் விளங்கினாய்உன்னால்அறிவேற்றங்கொண்டோர் கண்டு உளம் மகிழ்ந்தாய்என் பிள்ளைகள் என்று சொல்லி மனம் பூரித்தாய்இன்று எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்து விட்டாய் உன்னால்ஏற்றம் கண்ட நாம் இப்போது கண்ணீர் துளிகளைகாணிக்கை மாலைகளாக தர வேண்டிய சூழல் !உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்துயரங்களுடன்,
அன்பு மாணவன்

Tuesday, January 17, 2012

இலங்கையில் தேயிலை பரியிடப்பட்டு 145 வருடங்கள்…!







இலங்கையில் வர்த்தக நோக்கத்திற்காக தேயிலை பயிரிடப்பட்டு 2012 ஆம் ஆண்டோடு 145 வருடங்களாகின்றன. முதன் முதலாக 1867 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லரால் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர எனும் தோட்டத்தில் 19 ஏக்கர் விஸ்தீரணத்தில் தேயிலை வர்த்தக நோக்கத்திற்காக முதன் முதலில் பயிரிடப்பட்டது. ஆங்கிலேயர்களால் பயிரிடப்பட்டாலும் பராமரிப்பில் இத்தனை வருடங்கள் இத்தொழிலில் தம்மை அர்ப்பணித்த தொழிலாளர் வர்க்கத்தினர் பெருமிதத்தோடு பார்க்கப்பட வேண்டியவர்கள். இன்று நாட்டின் தேசிய உற்பத்தியிலும் கணிசமான பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் இந்த தேயிலை தொழிற்றுறை குறித்து அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் கவலை தருபவனவாக உள்ளன. பெருந்தோட்டங்கள் சிறு ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு சிறு தேயிலை தோட்டங்களாக மாறி வருகின்றமை, மற்றும் நிர்வாகங்களால் உரிய பராமரிப்பின்மை , இதன் காரணமாக தொழிலாளர்கள் வேறு தொழிலை நாடுதல் , நிர்வாக அழுத்தங்கள் என பல்வேறு வகையான சவால்களை இன்று இத்துறை எதிர்நோக்கியுள்ளது. எனினும் 145 வருடங்கள் என்று பார்க்கும் போது தேநீர் அருந்துதல் என்ற விடயம் எமது நாட்டை பொறுத்தவரை மரபு வழி அம்சமாகவே உள்ளதை அவதானிக்கலாம். தேயிலை பரியிடாத ஏனைய நாடுகள் தேநீரை இன்று பல்வேறு வகைகளில் ,வடிவங்களில் தயாரித்து நுகர்வோரை கவர்வதில் அக்கறை காட்டுகின்றன. நம் நாட்டை பொறுத்தவரை இது சாத்தியமான விடயமா என்பதை யோசிக்க வேண்டும். உதாரணமாக மேலை நாடுகளில் இன்று எனப்படும் சிறிய தேயிலை பக்கற்றுகளை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் ice Tea எனப்படும் குளிர் தேநீர் பானம் பிரபலமானது. தற்போது அமெரிக்காவில் மென்பானங்களுக்கு ஈடாக இந்த குளிர் தேநீர் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் இந்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டால் என்ன என்பது இத்துறையோடு தொடர்புடைய சந்தைப்படுத்தல் நிபுணர்களின் கேள்வியாகவுள்ளது.
RTD –Ready to Drink




நாடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதில் அதிக அக்கறை கொண்டியங்குகின்றன. அங்குள்ள தொழில்களும் அப்படியானவை. இதன் காரணமாகவே அங்குள்ள வாழ்வியல் கோலங்களை இயந்திரமயமான வாழ்க்கை என வர்ணிக்கின்றனர். இதன் காரணமாக சடுதியாக தமது காரியங்களை ஆற்றக்கூடிய நிலையில் அம்மக்கள் உள்ளனர். இதன் காரணமாக அருந்துவதற்கு தயாராக உள்ள பானங்களை ( ஆங்கிலத்தில் RTD –Ready to Drink ) இவர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இவ்வகை தேநீர் பானங்கள் பிரபலம்.மக்கள் இதை விரும்பி வாங்கி பருகுகின்றனர். அமெரிக்காவில் மட்டுமன்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இன்று இந்த ரக தேநீர் பானங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. எனினும் போத்தல்களில் அடைக்கப்பட்ட தேநீரை விட அண்மைக்காலமாக ஐஸ் டீ எனப்படும் குளிர் தேநீர் பிரபலமாகி வருகின்றது. இதன் காரணமாக ஏனைய மென்பானங்களின் விற்பனையுடன் போட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே உற்பத்தி பொருளை ஒரே வடிவத்தில் எத்தனை நாளுக்கு தான் மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருப்பது ? ஒரு மாற்றம் வேண்டாமா என்று தான் இந்த முயற்சி . சரி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் தேநீர் இவ்வாறு மறு வடிவம் பெற்று அங்குள்ளோரை கவர்ந்துள்ளது. பிரதானமாக இந்த தேயிலையை உற்பத்தி செய்து உலகம் எங்கும் விநியோகிக்கும் இலங்கை,கென்யா,இந்தியா ,சீனா போன்ற நாடுகளில் ஏன் இந்த முறை பிரபலமாகவில்லை ?எல்லது ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை? நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல இந்நாட்டு மக்கள் பாரம்பரிய நெறிகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். போத்தலில் இருக்கும் தேயிலை தூளை தேயிலை வடியில் இரண்டு கரண்டி போட்டு அதில் சுடு நீரை இட்டு பெறப்படும் சாயத்தண்ணியில் சீனி விட்டு பருகுவது இல்லாவிடின் அதில் பால் கலந்து பருகுவது என இவர்கள் வாழ்க்கை இப்படி போகிறது. சீனாவிலும் கூட மிகப்பிரபலமான கிரீன் டீ தகர டின்களில் அடைக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது. சீன கிரீன் டீக்கு உலகம் முழுவதும் வரவேற்பிருப்பது நாம் அறிந்ததே. சரி இந்த நாடுகளில் ஐஸ் டீயை அறிமுகப்படுத்தினால் வரவேற்பு இருக்குமா?முதலில் சூடாக நாம் பருகும் தேநீருக்கும் குளிர்பானமாக பருகும் ஐஸ் டீக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளல் அவசியம். வழமையாக நாம் பருகும் தேநீரில் சீனியை த்தவிர வேறு எந்த இரசாயன கலவைகளோ செயற்கை தாது பொருட்களோ இல்லை என்பது நிச்சியம். ( தேநீரில் இயற்கையாக உள்ள அதே நேரம் அதிக பக்கவிளைவை ஏற்படுத்தாத ரனின் என்ற நச்சு பதார்த்தம் இதில் அடக்கம்) ஆனாலும் ஐஸ் டீ எனப்படும் போது வர்ணப்பொருட்கள் மற்றும் கார்பனேட் பொருட்கள் கலக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இயற்கையாக தேநீரில் உள்ள சுவையை கூட்ட அல்லது வித்தியாசப்படுத்த இவை சேர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக தேநீரானது அதன் இயற்கையான சுவையிலிருந்து விலகிச்செல்கின்றது என்பது கண்கூடு. உலகப்பிரச்சித்த பெற்ற சீனாவின் கிரீன் டீயானது வெறும் சுடு நீரில் வேக வைக்கப்பட்டு சீனியோ அல்லது வேறு எந்த சுவையூட்டியோ சேர்க்காமல் பருகப்படுவதற்கு காரணமே அதன் இயற்கையான சுவையை அனுபவிப்பதற்கு தான். இருப்பினும் மேற்குல நாட்டு மக்களின் உணவு முறை பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை என்பது நாம் அறிந்ததே. அமெரிக்காவில் மட்டும் உடனடியாக அருந்துவதற்கு தயாராக இருக்கும் தேநீரின் 2009 ஆம் ஆண்டு சந்தைபுரழ்வு பெறுமதி 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்த வருடம் இது 11 பில்லியனை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாருங்கள் வாசகர்களே நமது தொழிலாளர்கள் வியர்வை சிந்தி கடினப்பட்டு 145 வருடங்கள் உழைத்தும் அவர்களுக்கு கிடைப்பதோ வெறும் டஸ்ட் தேயிலை தானே ; ஆனால் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உயர் இரகமாக இன்று ஐரோப்பிய நாடுகளின் அரச குடும்பங்களும் ஏனைய உயர் அந்தஸ்த்து உள்ளவர்களும் பருகும் பானமாக விளங்குகிறது. அமெரிக்காவில் மாற்று வடிவம் பெற்று வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆக மாற்றம் ஒன்று தான் உலகில் மாற்ற முடியாது ஒன்று என்பதற்கு ஏற்ப எல்லாமே மாற்றங்களுக்குட்பட்டு வருகின்றன. எனினும் இலங்கையோ தேயிலை பயிரிடப்பட்டு 145 வருடங்களாகியும் அத்துறையின் பழைய பல்லவிகளையே பாடி வருகின்றது. கொழுந்து பறிப்பவர்களும் இன்று நூறு வருடங்களுக்கு முன்பு உள்ள அதே வடிவிலான ஆடைகளே அணிகின்றனர். நவீன காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் இல்லை. ஏதோ இப்போது சிலர் செருப்புகள் அணிந்து செல்கின்றனர். எனினும் இலங்கையில் மிகப்பழைய இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்ற பாரிய தொழிலாளர் விசையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற தேயிலை தொழிற்றுறை மாற்றங்களுக்குட்பட வேண்டும் என்பதே பலரினதும் அவா. ஆனால் இதில் எந்த விதத்திலும் தொழிலாளர்களோ தேநீரின் பாரம்பரிய அம்சங்களோ மாறி விடக்கூடாது என்பது முக்கியமானது. ஆகவே புதிய,நவீன யுக்திகளை புகுத்தும் யோசனைகளே இப்போதைய தேவையே ஒழிய இந்த தொழிற்றுறையையும் அதனோடு தொடர்புடைய மக்களின் வாழ்வியல் விடயங்களையும் தொடர்ச்சியாக விமர்சித்து வருவதை உரியோர் நிறுத்திக்கொள்ளல் அவசியம்.
சிவலிங்கம் சிவகுமாரன்

Tuesday, January 10, 2012

அரபு, இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகள்






ஷகார் குல் மீட்கப்பட்ட போது






























மரியம்



அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் எந்தளவிற்கு இறுக்கமான கலாசாரம் பேணப்படுகின்றதோ அந்தளவிற்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் தலைவிரித்தாடுவதை கூறாமல் இருக்க முடியாது. பெண்கள் கல்வி கற்பதற்கு தடை, உடலின் எப்பாகமும் வெளியே தெரியும் படி ஆடைகள் அணிந்தால் கடுமையான தண்டனை , பெண்கள் என்றால் வீட்டில் மட்டுமே இருக்க வேண்டும் இப்படி பல கடுமையான சட்ட திட்டங்களை வகுத்த தலிபான்களால் கூட ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக மிக மோசமாக நடந்து கொள்ளும் ஆண்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளது. இதற்கு இவர்கள் பெண்களுக்கு எதிராக வகுத்த கடுமையான சட்டங்களே காரணமாகிவிட்டன. கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் 15 சிறுமிக்கு இடம்பெற்ற சம்பவம் வெளிவந்ததையடுத்து உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் அரபுலகம் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இடம்பெறும் பெண்களுக்கெதிரான சித்திரவதைகள் ,கொடுமைகள் போன்றவற்றை பகிரங்கப்படுத்தி இந்தப்பெண்கள் சிறுமிகள் படும் அவஸ்த்தைக்கு முற்றுப்புள்ள வைக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பியுள்ளன. அப்படி என்ன தான் நடந்தது ஆப்கானில் ?ஆப்கானிஸ்தானின் வட பிராந்திய மாநிலம் தான் பக்லான் . இங்கு வாழும் 30 வயதுடைய ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டவள் தான் 15 வயது சிறுமியான ஷகார் குல். ஏழு மாதத்திற்கு முன்னர் தமது பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததாகவும் அதன் பின்னர் தமது மகள் தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்க வில்லையென ஷகார் குல்லின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். விசாரணைகளின் பின்னர் ஷகாரை தேடி கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினர் பொலிஸார். இறுதியில் பக்லான் பிராந்தியத்தின் ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் மலசலகூட அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஷகாரை கண்டு பிடித்தனர் பொலிஸார். ஆனால் அந்த சிறுமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர், காரணம் நகங்கள் பிடுங்கப்பட்டு உடம்பெங்கும் சிகரட்டுகளால் சுடப்பட்ட காயம் மற்றும் பலமாக தாக்கியதால் தலை மற்றும் கண் பகுதிகளில் இரத்தம் வழிந்தோடிய நிலையில் கிட்டத்தட்ட அரைவாசி இறந்த விட்ட நிலையிலேயே அவர்கள் ஷகாரை மீட்டுள்ளனர். விசாரித்துப்பார்த்ததில் ஷகார் அரை குறையாக சொன்ன தகவல்கள் பொலிஸாரை திடுக்கிட வைத்தன. தனது கணவர் தன்னை கட்டாய விபசாரத்தில் ஈடு பட சொன்னதாகவும் மறுத்ததால் அடித்து உதைத்ததாகவும் கூறிய இவர் பின்னர் தனது கணவனின் சகோதரிகள் அனைவரும் தன்னை விபசாரத்தில் ஈடுபடுமாறும் அதன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனவும் வற்புறுத்தி அடித்து சித்திரவதை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர்களின் கட்டாயத்திற்கு தான் மறுத்த காரணத்தினாலேயே தன்னை கடந்த 5 மாதங்களாக வீட்டின் கீழ்த்தளத்திலுள்ள மலசலகூடத்தில் அடைத்து வைத்ததாகவும் சிறிதளவு உணவு நீரே வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். நினைத்த நேரத்தில் அறைக்குள் புகுந்து தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரிகள் தன் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கும் ஷகாரின் முழு வாக்குமூலத்தையும் பெறும் முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளனர். தற்போது இச்சிறுமி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஷகாரின் கணவன் தலைமறைவாகி விட அவரின் சகோதரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் பெண்களைப்பொறுத்தவரை ஏற்படுத்தப்பட்டுள்ள கடுமையான சட்ட திட்டங்களை தமக்கு சாதகமாகப்பயனபடுத்திக்கொள்ளும் குற்றச்சம்பவங்களே நாள் தோறும் இடம்பெறுகின்றன.இதில் பெண்களும் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கும் விடயமாகும். ஆப்கானிஸ்தானின் சுதந்திர மனித உரிமை ஆணைக்குழுவின் புள்ளி விபரங்களின் படி கடந்த ஆண்டின் இரண்டாது காலாண்டு வரை பெண்களுக்கெதிராக 1026 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது.

இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் மற்றுமோர் கடுமையான வழிமுறை தான் கௌரவக்கொலைகள். ஒரு குடும்பத்தில் உள்ள பெண் கலாசார விதிமுறைகளை மீறி நடந்ததாகவோ ,அல்லது நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டாலோ குடும்பத்தினரே அப்பெண்ணை கொலை செய்யும் முறைகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் குடித்தொகை நிதியத்தின் அறிக்கைகளின் படி வருடந்தோறும் இவ்வாறு தமது சொந்த குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேலாகும். அதிகமாக மத்திய கிழக்கு மற்றும் தென் மேற்கு ஆசிய நாடுகளிலேயே இந்த கொடுமைகள் இடம்பெறுகின்றன.இதில் துயரமான சம்பவம் என்னவெனில் குறித்த பெண்ணுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்து கொண்ட அல்லது காரணமான ஆணுக்கு எந்த தண்டனையும் இல்லை என்பதே. எனினும் இதில் மத கோட்பாடுகள் ,சட்டங்கள் செல்வாக்கு செலுத்துவதால் பலரும் இது குறித்து பேசத்தயங்குகின்றனர்.

“ நூறு முறை கொல்வேன்

“2011 ஆம் ஆண்டு வெளிவந்த சம்பவம் இது. ஆப்கானிஸ்தான் நாட்டைச்சேர்ந்த மொகமட் சாபியா என்பவர் தனது மூன்று மகள்மார் ஆண் நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்பதை அறிந்து 2009 ஆம் ஆண்டு அவர்களை கொலை செய்து புதைத்துள்ளார். அவர் இப்போது கனடாவில் வசிக்கிறார். எனினும் கடந்த ஆண்டே இந்த விடயம் வெளிஉலகுக்கு வந்தது. இவர் மீது வழங்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் கனடா பொலிஸார். தான் செய்ததை நியாயப்படுத்தும் சாபியா தனது மகள்மார் மூவரும் நூறு தடவைகள் உயிர் பெற்று வந்தாலும் நூறு தடவைகள் கொலை செய்வேன் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தனது குடும்பத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய காரணத்தினாலேயே தான் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவிக்கிறார். நான் ஒன்றும் கெட்டதை செய்ய வில்லையே என்கிறார். கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் முறையே 13,17,19 வயதையுடையவர்கள்.இந்தியாவிலும் இடம்பெறுகிறதுஎமது அண்டைய நாடான இந்தியாவில் கூட கௌரவக்கொலைகள் இடம்பெறுகின்றன.இதுவும் கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற ஒரு சம்பவம். இஸ்லாமிய மதத்தவர்கள் ஏனைய மதத்தவர்களுடனான திருமண பந்தத்தை அனுமதிப்பதில்லை. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஆணோ பெண்ணோ இஸ்லாமிய மதத்தை தழுவ வேண்டும்.அதன் பிறகே அனுமதி குறித்து பேசப்படும். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் பாக்பாத் எனும் இடத்தில் தமது மகள்மார் இருவரும் இந்து மதத்து இளைஞர்களை திருமணம் முடித்த சம்பவத்திற்காக இரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தாய்மார்கள் மகள்மாரை கொலை செய்துள்ளனர்.அவர்களது கழுத்தில் கயிற்றை கட்டி வலுக்கட்டாயமாக தூக்கிட்டு கொன்றுள்ளனர் இத் தாய்மார்.கௌரவக்கொலைகள் மூலமாக மட்டுமே அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது தான். வன்முறைகளில் இதுவும் ஒரு பகுதியே, முக்கியமாக அரபு நாடுகளில் கடுமையாக அமுல்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரீயா சட்டம் மூலம் பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதில் ஆண்களும் உள்ளடக்கப்படுவர் என்றாலும் சந்தர்ப்பங்கள் குறைவே. மதத்தோடு சார்ந்து சட்ட முறைகளாக இவற்றை பின்பற்றுவதால் மேற்குல மனித உரிமை ஆர்வலர்கள் என்ன தான் கத்தினாலும் இவற்றை அரபுலக ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. இதே வேளை உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ,சிரியா, ஆகிய நாடுகளிலும் கூட பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. வீட்டு வன்முறைகளில் இவை தங்கியுள்ளதால் அதிகமாக பொலிஸ் முறைப்பாடுகளும் செய்யப்படுவதில்லை. மிக இறுக்கமான கலாசாரத்தை பேணும் ஈரான் நாட்டிலும் பெண்கள், குழுக்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரிகத்துள்ளன. இதை விட பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன் வந்து சொல்வதற்கு அங்கு சுதந்திரமில்லை. உதாரணத்திற்கு ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். ஈரானின் சமத்துவத்தை பேணல் அமைப்பின் உறுப்பினர் மரியம் பார்மன். கடந்த வருடம் மார்ச் மாதம் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா கூட்டத்தொடரில் பெண்கள் நிலை பற்றிய இவர் உரையாற்றியிருந்தார். இதில் இவர் ஈரானில் இடம்பெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்ட தவறவில்லை. ஆனால் நாடு திரும்பிய இரண்டு மாதங்களுக்குள் இவர் கைது செய்யப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்பட்டமை, ஈரான் தொடர்பான தவறான தகவல்களை உலகம் அறியச்செய்தமை, போராட்டங்களில் பங்கெடுத்தமை, அதை விட நாட்டின் அதிஉச்சபீடத்திற்கு அபகீர்த்திடைய ஏற்படுத்தியமை போன்ற காரணங்களுக்காக இவர் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. தற்போது சிறைப்படுத்தப்பட்ட மரியமை விடுதலை செய்யக்கோரி உலகெங்கினும் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன.

உங்கள் சூரியகாந்தி இன்று முதல் இணையத்தில்!

மலையகத்தின் தனித்துவ குரலாக வலம் வரும் சூரியகாந்தி பத்திரிகையை இன்று முதல் வாகர்கள் இணையத்தில் இ.பேப்பர் வடிவில் (E-Paper) www.sooriyakanthi.lk என்ற முகவரியில் கண்டு மகிழழாம்.இதன் மூலம் உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சூரியகாந்தியையும் எமது மக்களைப்பற்றியும் அறியக்கூடியதாகவிருக்கும் அதே நேரம் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள ஏது வ.ாக அமையும் நவீன தொழிற்நுட்பத்திற்கேற்ப சூரியகாந்தி பத்திரிகையின் மற்றுமொரு பரிணாமமாக இது விளங்குகிறது. தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்ற இந்திய வம்சாவளி மக்களில் பெருந்தொகையானோரைக்கொண்டு குறிப்பிடத்தக்க சமூகமாக விளங்கும் மலைய மக்களுக்கென தனியானதொரு முதல் பத்திரிகையாக பரிணமிக்கும் சூரியகாந்தியின் வளர்ச்சியில் தொடர்ந்தும் வாசகர்களின் பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறோம்.

Thursday, December 29, 2011

கொல வெறி பாடல் வரிகள் தமிழில்







ஹலோ போய்ஸ் ஐ எம் சிங்கிங் ஸோங்...




சூப் ஸோங்..புளொப்




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




ரிதம் கெரக்ட்…




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




மெயிண்டெய்ன்




திஸ்வை திஸ் கொல வெறி? டி..




டிஸ்டன்ஸ்ல மூனு மூனு




மூனு கலரு வைட்டு..




வைட் பேக்கிரவுண்ட் நைட்டு நைட்டு




நைட்டு கலரு பிளக்கு..




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




வைட்டு ஸ்கின்னு கேர்ள்ளு கேர்ள்ளு..




கேர்ள்ளு ஹார்ட்டு பிளக்கு..!




ஐஸ்சு ஐஸ்சு மீட்டு மீட்டு..




மை பியூட்சர் டார்க்கு..!




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




மாமா நோட்ஸ் எடுத்துக்கோ ..




அப்படியே கைல ஸ்னெக்ஸ் எடுத்துக்கோ..




பாபா பா பா பாபா பாபா பா பா…




சரியா வாசி..




சூப்பர் மாமா ரெடி ரெடி 1 2 3 4..




வட் எ சேஞ்ச் ஓவர் மாமா..




ஓ கே மாமா நவ் டியூன் சேஞ்சு..




கைல கிளாசு.. ஒன்லி இங்கிலிஷ்சா..




ஹேண்ட்ல கிளாசு..




கிளாஸ்ல ஸ்கொட்ச்சு..




ஐஸ்ல புல்லா டியரு..!




எம்டி லைப்பு கேர்ள் கம்மு..




லைப்பு ரிவர்சு கியரு..




லவ்வு லவ்வு ஓ மை லவ்வு




யூ ஷோ டு மீ பவ்வு..!




கவ்வு கவ்வு ஹொலி கவ்வு




ஐ வோண்ட் யூ ஹியர் நவ்வு..!




கோட் ஐயாம் டையிங் நவ்வு..




ஷீ இஸ் ஹெப்பி ஹவ்வு..!




திஸ் ஸோங்கு போர் சூப் போய்சு..




வீ டோண்ட் ஏவ் ச்சொய்சு..




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?




புளொப் ஸோங்..




நோ டமில் ஒன்லி இங்கிலிசு..!







Tuesday, December 27, 2011

இந்திய வம்சாவளி மக்களை அடிமைகளாக சித்திரிக்கும் போக்கு மாற வேண்டும்








இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்போர் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாழந்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது தான் . தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி வந்த இந்த மக்கள் கூட்டத்தினாலேயே மலையகம் எனும் பிரதேசம் உருவாகியது. தமது இடைவிடாத உழைப்பின் மூலம் காடுகளை அழித்து பெருந்தோட்டங்களை உருவாக்கினர். எனினும் இவர்களை அடிமைகளாக சித்திரிக்கும் அதே நேரம் இன்னமும் இந்த மக்கள் கூட்டம் எந்த வித அடிப்படை உரிமைகளும் இன்றியே வாழ்ந்து வருகின்றனர் என்றும் இவர்கள் அரசியல் அனாதைகள் என்றும் பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இச்செய்கை ஒரு விதத்தில் இந்த மக்கள் கூட்டத்தினரை பரிதாபமாக பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. மலையகத்திலிருந்து உருவான இலக்கியவாதிகள் சிலரும் பத்திரிகையாளர்களும் கூட இன்னமும் இந்த மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்ற போக்கிலேயே பேசியும் எழுதியும் வருகின்றனர். இலங்கையின் ஏனைய சமுகத்தினரைப்போல அல்லாது எல்லா அம்சங்களுமே இந்த மக்களுக்கு மிக தாமதமாகவே கிடைத்தன என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு நாட்டில் வாழ்வதற்குரிய பிரஜா உரிமை கிடைத்ததே இம்மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். கல்வி ,குடியிருப்பு,சுகாதாரம் மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட காலகட்டத்தில் கூட எதிர் நீச்சல் போட்டு முன்னேறி இன்று பெயர் சொல்லும் படியான ஒரு அந்தஸ்த்தை இந்த மக்கள் பெற்றுள்ளதை மறுக்க முடியாது.எனினும் பல சந்தர்ப்பங்களில் இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய, படுத்தி வரும் தலைவர்களை கேலிக்குரிய பொருளாக்கி பார்ப்பதிலும் ஏனைய பிரதேச தலைவர்களின் சேவைகளை இவர்களோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்வதுமாக தமது காலத்தை போக்கி வருகின்றனர் சிலர். இந்தளவிற்கு இவர்களுக்கு பேசுவதற்குரிய சுதந்திரமும் கல்வியும் அந்த பழைய தலைவர்களாலேயே கிடைத்தது என்பதை இவர்கள் எக்காலமும் ஏற்றுக்கொள்வதில்லை.

தேங்காயும் மாசியும் ஒரு பொய்யான தகவல்
இலங்கையின் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையில் பிரதான இடத்தை வகிப்பது தேயிலை. தேயிலை பயிரிடுவதற்கு முன்பாக கோப்பி,கொக்கோ மற்றும் சிங்கோனா ஆகிய பயிர்களே பெருந்தோட்டப்பகுதிகளை அலங்கரித்தன. வரலாற்றை எடுத்துப்பார்த்தோமானால் 1769 இல் இருந்து 1830 வரை கறுவாவே இலங்கையின் பிரதான ஏற்றுமதி பயிராக இருந்தது. எனினும் இது எதிர்பார்த்தளவு இலாபத்தை கொடுக்காததால் 1825களிலேயே மாற்றுப்பயிராக கோப்பியை பயிரிடுவது என முடிவாயிற்று. ஒரு சில இடங்களில் பரீட்சார்த்தமாக கோப்பி பயிரிடப்பட்டிருந்தது. அதன் படி வர்த்தக நோக்கிற்காக இலங்கையில் முதன் முதலாக கோப்பியானது காலி மாவட்டத்தின் பத்தேகம எனும் இடத்தில் பயிரிடப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் வருகை தரத்தொடங்கியது இக்காலகட்டத்தில் தான். 1824 களிலேயே அவர்கள் வந்தமைக்கான சான்றுகள் இருந்தாலும் 1827 ஆம் ஆண்டே அவர்கள் இங்கு வந்ததற்கான பதிவுகளும் குறிப்புகளும் இருக்கின்றன. அதற்குப்பிறகு 1867 ஆம் ஆண்டு தேயிலை பயிர்ச்செய்கை பற்றிய எண்ணக்கரு ஆரம்பிக்கும் வரை இலங்கைக்கு வந்த இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்துக்கும் மேல். இவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக கோப்பிப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். 1824ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேயிலைச்செடி ஒன்று பேராதனை பூங்காவில் நடப்பட்டது. 1934 களில் கிழக்கிந்திய கம்பனி (பிரிட்டிஷ்) மூலம் இந்தியாவின் அசாம் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் தேயிலை வர்த்தக பயிராக பயிரிடப்பட்டது.அதே முயற்சியை இலங்கையிலும் மேற்கொண்டால் என்ன என்று பிரித்தானியருக்கு தோன்றியது. கோப்பிப் பயிரை ஒரு வித நோய் தாக்கியதால் மாற்றுப்பயிர் ஒன்றுக்கான அவசியம் எழுந்தது. அதன் படி ஜேம்ஸ் டெயிலரினால் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர எனும் இடத்தில் 19 ஏக்கர்களில் தேயிலை பயிரிடப்பட்டது. வர்த்தக நோக்கிற்காக தேயிலை பயிரிடப்பட்ட முதல் சந்தர்ப்பம் அதுவாகும். வரலாறு இப்படியிருக்க தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் பருப்பும் இருப்பதை நம்பி தான் தென்னிந்தியாவிலிருந்து மக்கள் இலங்கைக்கு வந்தனர் என்ற கட்டுக்கதையை இன்றளவும் சிலர் சொல்லி வருகின்றனர். தேயிலையே பயிரிடப்படாத காலகட்டத்தில் அது குறித்து எவ்வாறு பேசப்பட்டிருக்கும்? தேயிலைபயிரிடப்படுவதற்கு 40 வருடங்களுக்கு முன்னரே இந்த மக்கள் இலங்கைக்கு வந்து விட்ட சான்றுகள் தாராளமாகவே உள்ளனவே? ஆகவே வரலாற்றை ஆராயாமல் எதையுமே அறுதியிட்டு சொல்ல முன் வரக்கூடாது. தென்னிந்தியாவில் அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் மழையின்மை காரணமாகத்தான் மக்கள் வேறு தேசங்களுக்கு தொழில் தேடி பயணித்தனர். இலங்கைக்கு மட்டுமல்லாது இக்காலகட்டத்தில் அவர்கள் மலேசியா, மொரிஷியஸ்,மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் பயணித்தனர்.

மலையக மக்கள் அடிமைகளா?
அடிக்கடி இந்திய வம்சாவளி மலையக மக்களை பற்றி கூறப்படும் வாக்கியம் அடிமைகள் என்பதாகும். முதலில் அடிமைகள் என்றால் என்ன என்பதை பலரும் விளங்கிக்கொள்ளல் அவசியம். புராதன கிரேக்க,ரோம எகிப்து நாடுகளில் அடிமை முறை நிலவியது. ஒரு மனிதனை அவனது அனுமதி இல்லாது வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து வேலை வாங்குவது அவனை கொடுமை படுத்துவது அவனின் குடும்பத்தையும் ஆட்டிப்படைத்தல் தான் அடிமை தொழில்.அடிமைகள் என்றதுமே எமக்கு ஞாபகத்திற்கு வருவது ஆபிரிக்கா தான் . மத்திய ஆபிரிக்காவின் கொங்கோ எனும் நாட்டை தன் வசம் வைத்திருந்த பெல்ஜியம் இலட்சக்கணக்கானோரை அடிமைகளாக நடத்தியது. கைகள் கால்களை சங்கிலிகளால் பிணைத்து வேலை வாங்கப்பட்டது. இங்கிருந்து பல நாடுகளுக்கு அடிமைகள் விற்கப்பட்டனர். இடையில் தப்பித்து சென்று விடக்கூடாது என்பதற்காக சங்கிலியால் பிணைத்தே அழைத்துச்செல்லப்பட்டனர். 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்திற்கு முன்பாகவே அடிமை முறை கிட்டத்தட்ட 95 வீதம் ஒழிக்கப்பட்டு விட்டது, 1835 ஆம் ஆண்டு காலகட்டம் எனலாம்.இலங்கைக்கு தொழில் தேடி வந்த மக்கள் இப்படியா வந்தனர் அல்லது இப்படியா அழைத்து வரப்பட்டனர்? அவர்கள் சுதந்திரமாக வருகை தந்தனர்,பிற்பாடு தேயிலை தொழிற்றுறைக்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்பட்டதால் கப்பல்களில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் கால்நடையாக மாத்தளை ,கண்டி ,நுவரெலியாவுக்கு வந்தனர். இவர்களை அழைத்து வருவதில் பெரும்பங்காற்றிய பெரியகங்காணிமார்களே இவர்களை தமது அதிகாரத்தால் நசுக்கி பிழிந்தனர். ஆனால் அடிமையாக நடத்தினர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? 1960களில் பெரியகங்காணி முறையும் ஒழிக்கப்பட்டு விட்டது.

இப்போதைய காலகட்டம்
தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி இலங்கை வந்த இந்திய வம்சாவளினர் அல்லது தொழிலாளர் வர்க்கத்தினர் இங்கு குடியேறி சுமார் 188 ஆண்டுகள் ஓடி விட்டன. எனினும் இலங்கை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே இவர்களுக்கு ஓரளவிற்கேனும் சலுகைகள் கிடைக்கப்பெற்றன. அது வரையிலும் இவர்கள் அரசியல் அனாதைகளாக இருந்திருக்கலாம்.ஆனால் இப்போது அப்படியல்ல கல்வி உட்பட பல துறைகளில் இச்சமூக மக்கள் பெயர் சொல்லும் படியாக முன்னேற்றம் கண்டிருக்கின்றனர்.இவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் சலுகைகளின் காலகட்டங்களை வைத்துப்பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி தான். எனினும் பழைய பஞ்சாங்கங்களையே கூறிக்கொண்டு காலங்கழித்து வரும் ஒரு சில அரைவேக்காட்டு நபர்களினால் இம்மக்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் கிடப்பிலேயே போடப்படுகிறது. ஒரு சிலர் வடபகுதி மக்களை இவர்களோடு ஒப்பிட்டு எழுதுகின்றனர்.யுத்த சூழ்நிலைக்குப்பின்னர் வடபகுதி வாழ் மக்கள் பீனிக்ஸ் பறவைகளாக உயிர்த்தெழுந்திருக்கின்றனராம்.அது போல் இவர்களும் விழித்தெழ வேண்டுமாம் இது எவ்வளவு அபத்தமான விடயம்? வடபகுதி வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் மலையக மக்களின் பிரச்சினைகளையும் விளங்கிக்கொள்ளாத முட்டாள்களின் உளறல்களாகவே இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மலையகத்தைப்பொறுத்த வரை அமரர் தொண்டமானுக்குப்பிறகு ஒரு தலைவர் உருவாகவில்லை என்கின்றனர் ஒரு சிலர்.உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மகாத்மா காந்திக்குப்பிறகு தன்னலமற்ற ஒரு தலைவர் ஏன் உருவாகவில்லை? இதற்கு விடை கூறுவார்களா? காலம் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. காலமாற்றத்திற்கேற்ப சமூகம் .அரசியல் , பொருளாதாரம் ,கல்வி என அனைத்தும் மாறிக்கொண்டிருக்கும் போது மக்களின் மாற்றங்களுக்கேற்ப புதிய தலைமைத்துவங்களும் உருவாகும் ,மாற்றம்பெறும். இதை உணர்ந்து கொண்டு செயற்படுதலே சாணக்கியமாகும். முதலில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளல் அவசியம் .அதை விடுத்து ஏனைய சமுகங்களோடு ஒப்பீடு செய்து இதை ஏன் இந்த சமுகத்திற்கு செய்யமுடியாது என்று கேள்வி கேட்பது இயலாமையின் வெளிப்பாடாகவே அமையும். மலையகத்திலோ , தலைநகரிலோ அல்லது இலங்கையின் எப்பாகத்திலேனும் இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்களைப்பற்றி கொச்சையாகப்பேசுவது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. இம்மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை ஒன்றுமே கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் இந்த சமுகத்திற்கு என்ன பங்காற்றியிருக்கின்றனர் என்பதை கூற மாட்டார்கள்.காரணம் இப்படி கதைத்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பது தான் இவர்களின் தொழில். அரசியல் ரீதியாக இம்மக்கள் அனாதைகளாக இருக்கின்றனர் என்று கூறுபவர்கள் இம்மக்களுக்கு தலைமை தாங்க முன் வருவார்களா? மலையக இலக்கியம் இம்மக்களின் சோக வரலாற்றையே இசைக்கிறது என்பவர்கள் இம்மக்களின் மகிழ்ச்சியான பக்கத்தை எழுதுவார்களா? முதலில் வரலாற்றை தெரிந்து புரிந்து சில விடயங்களை கதைக்கவும் எழுதவும் முன் வர வேண்டும். அதை விடுத்து ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக ஆதாரமில்லாமல் உளறக்கூடாது. இந்த நாட்டில் மூவின மக்களுக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது.இதில் மலையக மக்கள் மட்டும் விதிவிலக்கல்லர் என்பதை புரிந்து கொள்ளல் அவசியம்.

சிவலிங்கம் சிவகுமாரன்

Monday, December 19, 2011

இலங்கையில் மிக உயரமான சிவனின் சிலை





















இலங்கையில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமையும் தட்சிண கைலாயம் என்ற நாமத்துடன் விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தின் பெருமையை இன்னும் ஒரு படி ஓங்கச்செய்யும் வகையில் அண்மையில் 33 அடி உயரமான சிவபெருமானின் தியான நிலை சிலை திறப்பு வைபவம் இடம்பெற்றது. இம்மாதம் 15 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இச்சிலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கையைப்பொறுத்தவரை மிக உயரமான சிவனின் சிலை இதுவாகும். பக்தர்கள் மனதை ஒரு முகப்படுத்தும் ஒரு சக்தி மிக்க ஞான நிலையை சிவனின் முகம் கொண்டிருக்கின்றது என்பது சிலையை வடித்த சிற்பியின் கைவண்ணமா அல்லது கோணேச்சர பெருமானின் சக்தியா என்பது தெரியவில்லை. சிலையை உற்றுப்பார்த்தால் இது விளங்கும். இந்த சிலையை உருவாக்கியவர் தமிழகம் காரைக்காலைச்சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமான் விஜயன் என்பவராவார். சிவனின் சிலை மட்டுமல்லாது இராவணன் வெட்டு எனும் கோயிலின் வாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடத்தில் தியான மண்டபமும் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதில் கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லிங்கம் ஏனைய விக்ரகங்களுடன் கிடைத்த லஷ்மி சமேத நாராயண விக்ரமும் வைக்கப்பட்டுள்ளன. சிலை திறக்கப்பட்ட அன்று பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருகோணமலை நகரத்திலிருந்து பார்த்தாலும் சிவனின் அந்த கம்பீரமும் சாந்தமும் கலந்த முகம் தெரிகிறது. பக்தர்களுக்காக அங்கு எடுக்கப்பட்ட படங்களைத்தருகிறோம்.